செய்யாறு அருகே விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு கோரி சாலை மறியல்


செய்யாறு அருகே விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு கோரி சாலை மறியல்
x
தினத்தந்தி 16 Dec 2017 3:30 AM IST (Updated: 16 Dec 2017 1:14 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டம் சோழவரம் கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன் வெல்டராக பணியாற்றி வந்தார்.

செய்யாறு,

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா சோழவரம் கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் பட்டரையில் வெல்டராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்று தனது மோட்டார்சைக்கிளில் சோழவரம் கிராமத்திற்கு வரும் போது காஞ்சிபுரம் இருந்து வந்தவாசி செல்லும் சாலையில் தனியார் கம்பெனி பஸ் மோதி விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தூசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் விபத்தில் பலியான மகேந்திரன் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி மகேந்திரனின் உறவினர்கள் செய்யாறு இருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் அழிஞ்சல்பட்டு

கிராமத்தில் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். தகவல் அறிந்தவுடன் செய்யாறு சரக போலீஸ் துணை சூப்பிரண்டு குணசேகரன், வெம்பாக்கம்
தாசில்தார் சுபாஷ்சந்தர் மற்றும் போலீசார் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுப்பட்டவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். மறியலை கைவிட்டு போக்குவரத்திற்கு வழிவிட்டு சாலை ஒரத்தில் காத்திருந்து விபத்தினை ஏற்படுத்திய தனியார் கம்பெனி பஸ் நிர்வாகத்தினர் வந்து இழப்பீடு வழங்க வேண்டும் என போலீசாரிடம் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதால் பெரிதும் பரபரப்பு ஏற்பட்டது. அரை மணிநேர போராட்டத்தினால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Next Story