ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை உடனே பேசி தீர்க்கக்கோரி போக்குவரத்து தொழிலாளர்கள்


ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை உடனே பேசி தீர்க்கக்கோரி போக்குவரத்து தொழிலாளர்கள்
x
தினத்தந்தி 16 Dec 2017 5:41 AM IST (Updated: 16 Dec 2017 5:41 AM IST)
t-max-icont-min-icon

ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை உடனே பேசி தீர்க்கக்கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தை நடத்தினார்கள்.

திருச்சி,

போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை உடனே பேசி தீர்க்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள போக்குவரத்துக்கழக மண்டல அலுவலகத்தில் 48 மணிநேர காத்திருப்பு போராட்டத்தை நேற்று முன்தினம் தொடங்கினார்கள்.

தொ.மு.ச. பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமை தாங்கினார். மண்டல தலைவர் குணசேகரன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு. உள்பட பல தொழிற்சங்கத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.

இந்தநிலையில் 2-வது நாளாக நேற்றும் காத்திருப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. திருச்சி மண்டலத்தில் உள்ள 19 கிளைகளிலும் ஏராளமானோர் போராட்டத்தில் பங்கேற்று இருந்தனர். காலை ஷிப்ட்டுக்கு சென்ற பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் மதியத்துக்கு பிறகு போராட்ட பந்தலுக்கு வந்து கலந்து கொண்டனர். இதற்கிடையே நேற்று மாலை போராட்டம் வாபஸ் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து திடீரென கோஷம் எழுப்பினார்கள். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். அதன்பிறகு சிறிதுநேரத்தில் சமாதானம் அடைந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story