தூத்துக்குடியில் நுண்கதிர் மருத்துவர் சங்க மாநாடு


தூத்துக்குடியில் நுண்கதிர் மருத்துவர் சங்க மாநாடு
x
தினத்தந்தி 17 Dec 2017 2:15 AM IST (Updated: 16 Dec 2017 8:56 PM IST)
t-max-icont-min-icon

இந்திய நுண்கதிர் மருத்துவர் சங்கத்தின் தமிழ்நாடு, புதுச்சேரி கிளையின் 70–வது மாநில 3 நாட்கள் மாநாடு, தூத்துக்குடியில் உள்ள தனியார் ஓட்டலில் கடந்த 15–ந் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது.

தூத்துக்குடி,

இந்திய நுண்கதிர் மருத்துவர் சங்கத்தின் தமிழ்நாடு, புதுச்சேரி கிளையின் 70–வது மாநில 3 நாட்கள் மாநாடு, தூத்துக்குடியில் உள்ள தனியார் ஓட்டலில் கடந்த 15–ந் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது.

தூத்துக்குடி, நெல்லை, குமரி உள்ளிட்ட கிளை சங்கங்களின் சார்பில் இந்த மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்த 400 நுண்கதிர் துறை மருத்துவர்கள் மற்றும் முதுகலை மருத்துவ மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.

2–வது நாளான நேற்று நடந்த இந்த மாநாட்டை, இந்திய நுண்கதிர் மருத்துவர் சங்கத்தின் தேசிய தலைவர் டாக்டர் பூபேந்திர அகுஜா தொடங்கி வைத்தார். 2018–ம் ஆண்டுக்கான தலைவர் தேர்வு மருத்துவர் மோகனன், 2019–ம் ஆண்டுக்கான தலைவர் தேர்வு மருத்துவர் ஹேமந்த் பட்டேல், காமன்வெல்த் மருத்துவர் சங்க அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் அருள்ராஜ் ஆகியோர் மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு பேசினார்கள்.

இந்த மாநாட்டில் முக்கிய நிகழ்ச்சியாக தூத்துக்குடியை சேர்ந்த நுண்கதிர் துறை மருத்துவர் சண்முகம், இந்திய நுண்கதிர் மருத்துவர் சங்கத்தின் தமிழ்நாடு, புதுச்சேரி கிளையின் மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு தற்போதைய மாநில தலைவரான டாக்டர் ராஜன், பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த மாநாட்டில் முதுகலை மருத்துவ மாணவர்களுக்கான கருத்தரங்கம் நடந்தது. பின்னர் வினாடி–வினா போட்டி, சுவரொட்டி தயாரித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த மாநாட்டுக்கான ஏற்படுகளை மாநாட்டின் செயலாளர் டாக்டர் புளோரா நெல்சன் செய்திருந்தார். இதில் 400–க்கும் மேற்பட்ட நுண்கதிர் துறை மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.

Next Story