வியாசர்பாடியில் ரவுடி வெட்டிக்கொலை 2 பேர் கைது
வியாசர்பாடியில், ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள 3 பேரை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
பெரம்பூர்,
சென்னை வியாசர்பாடி பி.வி.காலனி 28-வது தெருவில் வசித்து வந்தவர் ஞானசேகரன் என்ற குள்ள கண்ணன்(வயது 28). ரவுடியான இவர், பிரபல ரவுடி வெள்ளை ரவியின் கூட்டாளி ஆவார். இவர் மீது எம்.கே.பி. நகர், வியாசர்பாடி போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. பெயிண்டராகவும் வேலை செய்து வந்தார்.
குள்ள கண்ணனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அருண்குமார்(25), ராமலிங்கம்(26), அப்பு என்ற கலைச்செல்வன், மைக்கேல், சந்தோஷ் ஆகிய 5 பேருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்தது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது.
இந்த முன்விரோதம் காரணமாக அருண்குமார் உள்ளிட்ட 5 பேரையும் கொலை செய்ய குள்ள கண்ணன் திட்டம் தீட்டினார். இதை அறிந்து அஞ்சிய 5 பேரும், தங்களை குள்ள கண்ணன் கொலை செய்வதற்கு முன்பாக தாங்கள் முந்திக்கொண்டு அவரை கொலை செய்து விட முடிவு செய்தனர்.
இதற்காக சமயம் பார்த்துக்கொண்டிருந்த அவர்கள் 5 பேரும், குள்ள கண்ணனின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் குள்ள கண்ணன் தனது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருட்டில் மறைந்திருந்த அப்பு, அருண்குமார், மைக்கேல், ராமலிங்கம், சந்தோஷ் ஆகிய 5 பேரும் குள்ள கண்ணனை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டினார்கள்.
இதில் தலை, கழுத்து பகுதிகளில் பலத்த வெட்டுப்பட்ட குள்ள கண்ணன், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். உடனே 5 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த எம்.கே.பி. நகர் போலீசார், கொலையான குள்ள கண்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இது தொடர்பாக அருண்குமார், ராமலிங்கம் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சந்தோஷ், அப்பு, மைக்கேல் ஆகிய 3 பேரையும் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story