அந்தியூர் அருகே பெட்ரோல் பங்க் உரிமையாளருக்கு கொலை மிரட்டல்; 2 பேர் கைது


அந்தியூர் அருகே பெட்ரோல் பங்க் உரிமையாளருக்கு கொலை மிரட்டல்; 2 பேர் கைது
x
தினத்தந்தி 17 Dec 2017 3:30 AM IST (Updated: 17 Dec 2017 1:08 AM IST)
t-max-icont-min-icon

அந்தியூர் அருகே உள்ள செம்புளிச்சாம்பாளையத்தை சேர்ந்தவர் பெரியசாமி.

அந்தியூர்,

அந்தியூர் அருகே உள்ள செம்புளிச்சாம்பாளையத்தை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 60). இவர் தனது வீடு அருகே பெட்ரோல் பங்க் வைத்து நடத்தி வருகிறார். இங்கு நேற்று முன்தினம் இரவு 2 பேர் மோட்டார்சைக்கிளில் பெட்ரோல் போடுவதற்காக வந்தார்கள். பெட்ரோல் போட்டுவிட்டு ஊழியரிடம் மோட்டார்சைக்கிள் சக்கரத்துக்கு காற்று அடைக்க கூறினார்கள். அதற்கு ஊழியர், காற்று பிடிக்கும் கம்ப்ரசர் பழுதாகி விட்டது. எனவே காற்று அடைக்க முடியாது என்று கூறியதாக கூறப்படுகிறது. அதற்கு அவர்கள் 2 பேரும், காற்று பிடிக்கும் கம்ப்ரசரை ஏன் இவ்வாறு பழுதாகி வைத்திருக்கிறீர்கள்? என்று கூறி பெரியசாமியிடம் தகராறில் ஈடுபட்டார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் 2 பேரும் கல்லால் பெரியசாமியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்கள்.

இதுகுறித்து பெரியசாமி அந்தியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்கள். விசாரணையில் அவர்கள் அந்தியூர் பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் (22), தவுட்டுப்பாளையத்தை சேர்ந்த பிரகாஷ் (22) ஆகியோர் என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் 2 பேரையும் கைது செய்தார்கள்.


Next Story