மார்கழி மாத பிறப்பையொட்டி தா.பழூர் விசுவநாதர் கோவிலில் சிறப்பு பூஜை
மார்கழி மாத பிறப்பையொட்டி தா.பழூர் விசுவநாதர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. தேவார, திருவாசக நூல்களை சிவனடியார்கள் சுமந்து வழிபட்டனர்.
தா.பழூர்,
மாதங்களில் நான் மார்கழி மாதமாக இருக்கின்றேன் என்று கண்ணபிரான் பகவத்கீதையில் அருளினார். அவரது திருவாய்மொழி மார்கழியின் சிறப்புகளை உயர்த்திப் பேசும் புண்ணிய மாதமாக அமைந்து விட்டது. ஆன்மிக மார்க்கத்திற்கு செல்ல முதன்மையான மாதமாக கருதப்படும் மார்கழி மாதத்தை ‘தனூர் மாதம்‘ என்றும் அழைப்பார்கள். இம்மாதத்தில் விடியற்காலை 4 மணி முதல் 6 மணி வரையுள்ள பிரம்ம முகூர்த்த காலத்தில் இறைவனை வழிபடுவது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இப்படி சிறப்பு வாய்ந்த இம்மாதத்தில் அனைத்து சிவாலயங்களிலும் அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு, அபிஷேக ஆராதனை நடைபெறும்.
விசுவநாதர் கோவில்
சிவாலயங்களில் மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாசுரங்களை பக்தர்கள் பாடுவர். அதேபோன்று வைஷ்ணவ திருத்தலங்களில் திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாசுரங்கள் மற்றும் இராப்பத்து, பகல்பத்து என்ற முறையில் நாலாயிர திவ்ய பிரபந்தம் பாராயணம் செய்யப் படும். அதேபோன்று அனைத்து கோவில்களிலும் பக்திப்பாடல்கள் ஒலிபரப்பி மார்கழி மாதம் முழுவதும் கடவுள் வழிபாட்டிலேயே பொதுமக்கள் கவனம் செலுத்தி வருவது வழக்கமாக உள்ளது.
அதன்படி நேற்று மார்கழி மாத பிறப்பையொட்டி அரியலூர் மாவட்டம் தா.பழூர் விசாலாட்சி சமேத விசுவநாதர் கோவிலில் அதிகாலை சிறப்பு பூஜை தொடங்கியது. சுவாமி மற்றும் அம்பாளுக்கு அரிசிமாவு, மஞ்சள், களபம், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், பால், தயிர், விபூதி, சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து 63 நாயன்மார்களில் முதல்வராக இருக்கப்பெறும் திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் இயற்றிய திருமுறை நூல்களை படிச்சட்டத்தில் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் அனை வருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து தேவார, திருவாசக நூல்களை தா.பழூர் பகுதி சிவனடியார்கள் திருஞானசம்பந்தம், பாபு, ஜோதி, பாலு, கணபதி, முருகன், காசிநாதன் உள்ளிட்ட பலர் சுமந்து கொண்டு வழிபாடு செய்தனர். முன்னதாக திருவெம்பாவை, திருபள்ளியெழுச்சி, பன்னிரு திருமுறை பாடல்கள் ஓதப்பட்டது.
இதைபோல் கோடலிகருப்பூர் மீனாட்சி சமேத சொக்கநாதர், நாயகனைபிரியாள் சிவன் கோவில்களிலும் பூஜைகள் நடைபெற்றது.
பாடல்களை பாடி...
மார்கழி மாதத்தையொட்டி தாதம்பேட்டை ஸ்ரீ வரதராஜபெருமாள் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கோவில் பட்டாச்சாரியார்கள் மற்றும் பக்தர்கள் திருப்பாவை மற்றும் திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் பாடி வழி பட்டனர்.

Related Tags :
Next Story