நிலுவை தொகையை வழங்க கோரி சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகியை விவசாயிகள் முற்றுகை
நிலுவை தொகையை வழங்ககோரி பெரம்பலூர் சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகியை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குன்னம்,
பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தை அடுத்துள்ள புதுவேட்டக்குடி கிராம கரும்பு விவசாயிகள் மற்றும் மாவட்டத்தில் உள்ள கரும்பு விவசாயிகளுக்கு 2014-2015 மற்றும் 2015-2016-ம் ஆண்டுக்கான அரவை பருவத்திற்காக எறையூர் சர்க்கரை ஆலை சார்பில் கரும்பு டன்னுக்கு ரூ.2,850 என அறிவித்தது. அதன்படி விவசாயிகள் எறையூர் சர்க்கரை ஆலைக்கு கரும்புகளை வெட்டி அரவைக்கு அனுப்பினர். ஆனால் ஆலை நிர்வாகம் புதுவேட்டக்குடி பகுதி விவசாயிகளுக்கு நிலுவை தொகை ரூ.3 கோடியை கடந்த 2 ஆண்டுகளாக வழங்கவில்லை. இதனால் தற்போது புதுவேட்டக்குடி பகுதி கரும்பு விவசாயிகள் சுமார் 500 பேர் 2,600 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட கரும்புகளை எறையூர் சர்க்கரை ஆலைக்கு வெட்டி அனுப்பவில்லை.
தலைமை நிர்வாகியை விவசாயிகள் முற்றுகை
இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி ரேவதி, கரும்பு வளர்ச்சி கோட்ட அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் அலுவலர்கள், புதுவேட்டக்குடி கரும்பு கோட்ட வளர்ச்சி அலுவலகத்திற்கு விவசாயிகள் கரும்புகளை ஏன் வெட்டி அரவைக்கு அனுப்பவில்லை என்பதை ஆய்வு செய்ய வந்தனர். அப்போது 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பெரம்பலூர் சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி ரேவதியை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அப்போது விவசாயிகள், கடந்த 2 ஆண்டுகளாக எங்களுக்கு வழங்க வேண்டிய கரும்பு நிலுவை தொகையை ஏன் வழங்கவில்லை என கேள்வி எழுப்பினர். குறைகளை கேட்டு அறிந்த பெரம்பலூர் சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி மற்றும் அதிகாரிகள் இதற்கு வருகிற 21-ந் தேதிக்குள் அரசிடம் கேட்டு பின்னர் நிலுவை தொகை வழங்கப்படும் என்றனர். மேலும் அவ்வாறு நிலுவை தொகையை உடனே வழங்க வில்லை எனில் வெளி ஆலைக்கு கரும்புகளை வெட்டி அனுப்புவோம் என்று விவசாயிகள் கூறினர். இதனால் அப்பகுதிகள் சிறிது நேரம் பரபரப்பு எற்பட்டது. பின்னர் அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story