நாகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் 76 பேர் கைது
நாகையில் சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 76 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகப்பட்டினம்,
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை கண்டித்து நாகையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா நாகை வந்தார். இவருக்கு கருப்புக்கொடி காட்டுவதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், நாகை வெளிப்பாளையம் வண்டிப்பேட்டை, நாகூர் உள்ளிட்ட இடங்களில் திரண்டு நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்ய முயன்றனர். இந்த நிலையில் கைது செய்ய முயன்ற போலீசாரை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தொகுதி செயலாளர் அறிவழகன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
76 பேர் கைது
இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்தனர். இதேபோல் நாகூரில் சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை போலீசார் கைது செய்தனர். இந்த 2 இடங்களிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 76 பேரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story