கோவில்களில் மார்கழி மாதம் முதல் தேதியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்
வெள்ளியணை, குளித்தலை பகுதிகளில் உள்ள கோவில்களில் மார்கழி மாதம் முதல் தேதியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வெள்ளியணை,
தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்துக்கும் ஒவ்வொரு சிறப்பை வழங்கி நமது முன்னோர்கள் செயல்பட்டு வந்துள்ளனர். அந்த வகையில் மார்கழி மாதத்தில் மற்ற சுப நிகழ்ச்சிகள் எதையும் நடத்தாமல் தெய்வீக செயல்களில் ஈடுபடுவதை தமிழர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். மாதங்களில் நான் மார்கழி என கிருஷ்ணபரமாத்மர் கூறியதாக பகவத்கீதையில் உள்ளது. இந்த மாதத்தில் அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் குளித்து வாசலில் கோலமிட்டு பிள்ளையார் உருவம் செய்து வைத்து அதில் பூசணிப்பூவை செருகி விளக்கேற்றி பின் கோவிலுக்கு சென்று திருப்பாவை, திருவெம்பாவை பாடி இறைவனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த மார்கழி மாதம் முதல் தேதியான நேற்று வெள்ளியணை கருமாரியம்மன் கோவிலில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்றுப்பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் வெள்ளியணை பெருமாள் கோவில், முருகன் கோவில், பகவதியம்மன் கோவில், ஜெகதாபி மாரியம்மன் கோவில், பொரணி மாரியம்மன் கோவில், மூக்கணாங்குறிச்சி நத்தமேடு வீரபாண்டீஸ்வரர் கோவில் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளிலுள்ள கோவில்களிலும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இப்பகுதி கோவில்கள் அனைத்திலும் ஒலிபெருக்கி மூலம் பக்தி பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன.
இதேபோல் குளித்தலை பகுதியில் உள்ள கோவில்களில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கடம்பவனேசுவரர் கோவிலில் காலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி நடைபெற்றது. இதில் திருப்பாவை, திருவெம்பாவை பாடப்பட்டது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மார்கழி மாதம் முழுவதும் தினசரி காலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி நடைபெறும். மார்கழி மாத பிறப்பையொட்டி நேற்று காலை குளித்தலை கடம்பந்துறை காவிரி ஆற்றில் திரளானோர் புனிதநீராடி கடம்பவனேசுவரரை வணங்கி, அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர். மேலும் நேற்று சனிக்கிழமை என்பதாலும், சனிப்பெயர்ச்சி நாளை நடைபெறவுள்ளதாலும் சிலர் சனீஸ்வரருக்கு அர்ச்சனைசெய்தும் வழிபட்டனர்.
காலை கடம்பர், கட்டுச்சி சொக்கர், அந்தி திருஈங்கோய்நாதர் என்பது பழமொழி. அதாவது காலையில் குளித்தலையில் உள்ள கடம்பவனேசுவரரையும், மதியம் அய்யர்மலையில் உள்ள ரத்தினகிரீசுவரரையும், மாலை திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள திருஈங்கோய்மலையில் உள்ள மரகதாசலேசுவரரையும் வழிபட்டால் நினைத்த காரியம் நிச்சயம் நடைபெறும் என்பது ஜதீகம். இதன் காரணமாக நேற்று பலர் விரதமிருந்து கடம்பந்துறை காவிரி ஆற்றில் புனிதநீராடி காலை கடம்பவனேசுவரருக்கு அர்ச்சனைகள் செய்து வழிபட்டு, அய்யர்மலைக்கு நடந்துசென்று மலைமேல் உள்ள ரத்தினகிரீசுவரரை மதியம் வழிபட்டனர். பின்னர் அய்யர்மலையில் இருந்து திருஈங்கோய்மலைக்கு நடந்து சென்று மாலை மரகதாசலேசுவரரை வழிபட்டனர். மார்கழி மாதபிறப்பையொட்டி குளித்தலையில் உள்ள நீலமேக பெருமாள் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் காலை திருப்பாவை பாடப்பட்டு சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Tags :
Next Story