கிருஷ்ணகிரி அணையில் மதகில் ஷட்டர் பொருத்தும் பணி தீவிரம்


கிருஷ்ணகிரி அணையில் மதகில் ஷட்டர் பொருத்தும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 17 Dec 2017 4:30 AM IST (Updated: 17 Dec 2017 2:20 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி அணையில் மதகில் ஷட்டரை பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஓரிரு நாட்களில் பணி முடியும் என்று அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அணையின் பிரதான மதகில் முதல் ஷட்டர் கடந்த மாதம் 29-ந் தேதி உடைந்தது. இதனால் அணையில் தேக்கி வைக்கப்பட்டிருந்த 51 அடி தண்ணீரில், உடைந்த மதகை சீர் செய்ய அணையில் தேக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 19 அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

அதாவது சுமார் 1.40 டி.எம்.சி. தண்ணீர் வெளியேறியது. பின்னர் உடைந்த ஷட்டர் 7 நாட்களுக்கு பின் முற்றிலும் அகற்றப்பட்டது. இதையடுத்து புதிதாக மதகில் ஷட்டர் பொருத்தும் பணி தொடங்கியது. நேற்று 3-வது நாளாக ஷட்டர் பொருத்தும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.

இதற்காக பொக்லைன் எந்திரம் மூலமாக இரும்பு பலகை கீழே இறக்கப்பட்டு தகடுகள் பொருத்தப்பட்டது. மதகில் புதிய ஷட்டரை பொருத்தும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்த பணிகள் ஓரிரு நாட்களில் முடிய வாய்ப்புள்ளது என்று அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. 

Next Story