நாகையில் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுப்பு: பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கைது
நாகையில் பா.ஜனதா சார்பில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்து விட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்த பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கைது செய்யப்பட்டார்.
நாகப்பட்டினம்,
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது, இந்து கோவில்களை இடித்து விட்டு புத்த கோவில்கள் கட்ட வேண்டும் என கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், திருமாவளவனை கண்டித்தும் நாகை மாவட்டம் சீர்காழியில் பா.ஜனதா சார்பில் கடந்த 11-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அங்கு வந்து ரகளையில் ஈடுபட்டனர். இதை கண்டித்து நாகையில் நேற்று பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று மாலை எச்.ராஜா நாகை வந்தார்.
அவரை வரவேற்பதற்காகவும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்காகவும் நாகை மாவட்ட பா.ஜனதா தலைவர் நேதாஜி தலைமையில் 100-க்கும் மேற்பட்டவர்கள் நாகை அருகே உள்ள வாஞ்சூர் சோதனை சாவடி பகுதியில் காத்திருந்தனர். இதையொட்டி அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கிடையாது என கூறிய போலீசார், எச்.ராஜா மற்றும் பா.ஜனதா கட்சியினரை கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். முன்னதாக உதவி போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணனுக்கும், எச்.ராஜாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கைதான எச்.ராஜா மற்றும் பா.ஜனதா கட்சியினர் நாகையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
அதேபோல வெளிப்பாளையம் ஏழைப்பிள்ளையார் கோவில், புத்தூர் உள்ளிட்ட இடங்களில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற பா.ஜனதா கட்சியினர் 500 பேரை போலீசார் கைது செய்தனர். இதனிடையே எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஜனநாயக முறைப்படி ஆர்ப்பாட்டம் நடத்த இருந்த பா.ஜனதாவினருக்கு அனுமதி மறுக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம். ஜவாஹிருல்லா, திருமாவளவன் போன்ற வன்முறை சக்திகளுக்கு தமிழக போலீசார் துணை நிற்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story