இறந்து போன மீனவர்கள் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கக்கோரி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்

இறந்து போன மீனவர்கள் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கக்கோரி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 Dec 2017 4:15 AM IST (Updated: 17 Dec 2017 2:49 AM IST)
t-max-icont-min-icon

இறந்து போன மீனவர்கள் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கக்கோரி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி,

ஒகி புயலில் சிக்கி காணாமல் போன மீனவர்களை கண்டு பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்து போன மீனவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் நேற்று கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில துணை பொது செயலாளர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட செயலாளர் திலீப்குமார் வரவேற்றார். மாநில துணை பொது செயலாளர் லட்சுமணக்குமார், துணை தலைவர் உமாநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அமைப்பு செயலாளர் எழில் அரசன், தலைவர் வினோத், புறநகர் மாவட்ட தலைவர் புருசோத்தமன், செயலாளர் சுந்தரமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story