கும்பகோணத்தில் பாத்திர தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


கும்பகோணத்தில் பாத்திர தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 Dec 2017 4:00 AM IST (Updated: 17 Dec 2017 2:49 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணத்தில் பாத்திர தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்ப கோணம் பகுதியில் உள்ள எவர்சில்வர், பித்தளை பாத்திரங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு கடந்த 13-ந்தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி நேற்று தாராசுரம் பஸ் நிலையம் அருகே கும்பகோணம் அனைத்து எவர்சில்வர், பித்தளை பாத்திர தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டுக்குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். கூட்டுக்குழு செயலாளர் மதியழகன், கூட்டுக்குழு நிர்வாகிகள் சவுந்தரராஜன், செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும், இயற்கையாகவோ அல்லது விபத்திலோ இறக்கும் தொழிலாளர்களின் இறுதி சடங்கிற்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் கும்பகோணம் அனைத்து எவர்சில்வர், பித்தளை பாத்திர தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழுவை சேர்ந்த சாமிநாதன், மரியதாஸ், சேகர், வீரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story