மும்பைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.40 லட்சம் மாட்டிறைச்சி பறிமுதல்


மும்பைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.40 லட்சம் மாட்டிறைச்சி பறிமுதல்
x
தினத்தந்தி 17 Dec 2017 3:53 AM IST (Updated: 17 Dec 2017 3:53 AM IST)
t-max-icont-min-icon

வெளிமாநிலத்தில் இருந்து மும்பைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.40 லட்சம் மதிப்புள்ள மாட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

மும்பை,

வெளிமாநிலங்களில் இருந்து மும்பைக்கு சட்டவிரோதமாக மாட்டிறைச்சி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் மும்பை– புனே நெடுஞ்சாலையில் உள்ள காலாப்பூர் சுங்கசாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

சம்பவத்தன்று அதிகாலை 5 மணி அளவில் நாகலாந்து மாநில பதிவெண் கொண்ட கன்டெய்னர் லாரி ஒன்று வந்தது. போலீசார் அந்த லாரியை வழிமறித்து சோதனை போட்டனர்.

அப்போது கண்டெய்னரில் மாட்டிறைச்சி பாக்கெட்டுகள் இருந்தன. ஆனால் அதை மும்பைக்கு கொண்டு வருவதற்கான ஆவணங்கள் எதுவும் லாரி டிரைவரிடம் இல்லை. இதையடுத்து போலீசார் மாட்டிறைச்சியை, லாரியுடன் பறிமுதல் செய்தனர். மேலும் மாட்டிறைச்சி கடத்திய லாரி டிரைவர், கிளீனரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மாட்டிறைச்சியின் மதிப்பு ரூ.40 லட்சம் இருக்கும் என போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

Next Story