மாணவர்கள் கல்வி பெற செய்ய வேண்டும் கலெக்டர் பேச்சு


மாணவர்கள் கல்வி பெற செய்ய வேண்டும் கலெக்டர் பேச்சு
x
தினத்தந்தி 17 Dec 2017 4:45 AM IST (Updated: 17 Dec 2017 4:45 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டத்தில் பள்ளிகளில் குடிநீர், சுகாதாரம், சுத்தம் மேம்படுத்துதல் குறித்த பயிலரங்கத்தை கலெக்டர் பொன்னையா தொடங்கி வைத்தார். பயிலரங்கம் காஞ்சீபுரம் மாவட்டம் யுனிசெப் சார்பில் பள்ளிகளில் குடிநீர், சுகாதாரம், சுத்தம் மேம்படுத்துதல் மற்றும் மா

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் பள்ளிகளில் குடிநீர், சுகாதாரம், சுத்தம் மேம்படுத்துதல் குறித்த பயிலரங்கத்தை கலெக்டர் பொன்னையா தொடங்கி வைத்தார்.

காஞ்சீபுரம் மாவட்டம் யுனிசெப் சார்பில் பள்ளிகளில் குடிநீர், சுகாதாரம், சுத்தம் மேம்படுத்துதல் மற்றும் மாணவர்கள் குழுக்களை உருவாக்குதல் குறித்த பயிலரங்கம் காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி கூட்டரங்கில் நடந்தது. இந்த பயிலரங்கத்தை கலெக்டர் பொன்னையா தொடங்கி வைத்து பேசினார்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்களிடையே நல்ல பழக்கங்களை ஏற்படுத்த வேள்டும். கைகளை கழுவுதல், சுற்றுப்புறத்தை சுகாதாரமாக பராமரித்தல், வெளியிடங்களில் சிறுநீர் கழிக்காமல் கழிவறையை பயன்படுத்துதல் குறித்து மாணவர்களை ஊக்கப்படுத்துதல் வேண்டும். அதற்காக பள்ளிகளில் மாணவர்கள் குழுக்களை அமைக்க வேண்டும். இதன் மூலம் சுகாதாரத்தை மேம்படுத்த முடியும்.

சில பள்ளிகளில் கழிவறையை பூட்டி வைக்கின்றனர். இதனால் கழிவறை அமைப்பதன் நோக்கம் நிறைவேறுவது இல்லை. சிறு, சிறு வி‌ஷயங்களில் நம்மை முழுமையாக ஈடுபடுத்தி மாணவர்களை வழி நடத்தினால் பள்ளிகளில் சுகாதாரம் மேம்படும். காஞ்சீபுரம் மாவட்டத்தில் யுனிசெப் சார்பில் 15 பள்ளிகளை சிறப்பான முன்மாதிரி பள்ளிகளாக உருவாக்க உள்ளார்கள். ஆசிரியர்கள் இந்த பயிற்சியை முழுமையாக பயன்படுத்தி பள்ளிகளில் மாணவர்கள் குழுக்களை உருவாக்கி சுகாதார சூழ்நிலையில் மாணவர்கள் கல்வி பெற செய்ய வேண்டும்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயக்குமார், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் தாயளன், மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) எஸ்.ரமேஷ், இந்திய சுற்றுச்சூழல் சுகாதார கல்வி கரூவூலத்தின் சார்பில் கிருஷ்ணமூர்த்தி, சுப்புலட்சுமி, ஸ்ரீவரமங்கை, யுனிசெப் சார்பில் ஹம்ஸா ஆகியோர் கலந்துகொண்டனர்.


Next Story