தமிழக அரசுக்கு, கர்நாடக தலைமை செயலாளர் கடிதம்


தமிழக அரசுக்கு, கர்நாடக தலைமை செயலாளர் கடிதம்
x
தினத்தந்தி 17 Dec 2017 4:48 AM IST (Updated: 17 Dec 2017 4:48 AM IST)
t-max-icont-min-icon

காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கு, கர்நாடக தலைமை செயலாளர் ரத்னபிரபா கடிதம் எழுதி உள்ளார். அதில், ‘தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்க இயலாத நிலை உள்ளது’ என கூறப்பட்டுள்ளது.

பெங்களூரு,

தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு, கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதியது.இந்த நிலையில் தமிழக அரசின் கடிதத்திற்கு கர்நாடக அரசின் தலைமை செயலாளர் ரத்னபிரபா பதில் கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:–

கர்நாடகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கனமழை பெய்தது. இதனால் கே.ஆர்.எஸ். அணை நிரம்பியது. அதைத்தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. தற்போது கர்நாடகத்தில் மழை பெய்யவில்லை. இதன் காரணமாக கே.ஆர்.எஸ். உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

அணைகளிலும் தண்ணீர் குறைவாகவே இருக்கிறது. இந்த தண்ணீரை குடிநீருக்கு மட்டுமே பயன்படுத்த கூடிய நிலை உள்ளது. இதனால் தற்போது தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட இயலாத நிலை உள்ளது. வரும் காலங்களில் கர்நாடகத்தில் போதிய மழை பெய்தால், கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


Next Story