ஓட்டல்கள், டீக்கடைகளில் முறைகேடாக பயன்படுத்தப்பட்ட 30 கியாஸ் சிலிண்டர்கள் பறிமுதல்
ஓட்டல்கள், டீக்கடைகளில் முறைகேடாக பயன்படுத்தப்பட்ட 30 கியாஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
வேலூர்,
வேலூர் மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார் தலைமையில் நேற்று காட்பாடியில் சித்தூர் பஸ் நிறுத்தம் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள டீக்கடைகள், ஓட்டல்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர்களை ஓட்டல்கள் மற்றும் டீக்கடைகளில் முறைகேடாக பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு 21 கியாஸ் சிலிண்டர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதேபோல் வேலூர் காந்திரோடு, பாபுராவ் தெரு ஆகிய பகுதிகளில் முறைகேடாக பயன்படுத்தப்பட்ட 9 கியாஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story