பெண் போலீசாரின் வித்தியாசமான பிரசாரம்
பெண்கள் தாங்கள் எதிர்கொள்ளும் துன்பங்கள், பிரச்சினைகள் குறித்து தயக்கமின்றி போலீசை நாடும் நோக்கத்தில் பெண் போலீசார் சைக்கிளில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டிருக்கிறார்கள்.
பெண்கள் தாங்கள் எதிர்கொள்ளும் துன்பங்கள், பிரச்சினைகள் குறித்து தயக்கமின்றி போலீசை நாடும் நோக்கத்தில் பெண் போலீசார் சைக்கிளில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டிருக்கிறார்கள். இதற்காக ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த 4 பெண் போலீசார் 1,250 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளிலேயே மாவட்டத்தை வலம் வந்திருக்கிறார்கள். இந்த பயணத்தின்போது 57 தாலுகாக்களை உள்ளடக்கிய கிராமங்களில் வசிக்கும் பெண்களை சந்தித்து பேசி இருக்கிறார்கள்.
நிர்மலா, திருமலா, நாகரத்னா மற்றும் பார்கவி ஆகிய நான்கு பெண் போலீசார் மேற்கொண்ட சைக்கிள் பயணத்திற்கு கிராமப்பகுதிகளில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. பெண்களுக்கு எதிரான வன்முறை, கடத்தல் சம்பவம், பாலியல் தொந்தரவு உள்பட பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் குறித்து அங்கு வசிக்கும் பெண்களிடம் விவாதிக்கப்பட்டிருக்கிறது. இதில் போலீஸ் அதிகாரிகள், வக்கீல்கள், மகளிர் குழுக்கள், ஆசிரியர்கள், மாணவர்களும் இணைந் திருக்கிறார்கள். அவர்களுடன் இணைந்து தங்கள் பயண நோக்கத்தை எளிதாக பெண் களிடம் விளக்கியிருக் கிறார்கள்.
பெண் போலீசாரின் சைக்கிள் பயணம் செங்குத்தான மலைப்பாதைகள், காடுகள் வழியாக மலைக்கிராமங்களையும் சென்றடைந்திருக்கிறது. அங்கு வசிப்பவர்களிடம் பெண் உரிமைகள் மற்றும் சட்டம் சார்ந்த விழிப்புணர்வு குறைவாகவே இருந்திருக்கிறது. தங்கள் பிரச்சினைகளுக்காக போலீஸ் நிலையங்களை நாடுவதற்கு தயங்கி இருக்கிறார்கள். மன அழுத்தமும் அவர்களை ஆட்கொண்டிருக்கிறது. பெண் போலீசார் அவர்களிடம் அனுசரணையாக பேசி இருக்கிறார்கள்.
‘‘போலீசை அணுகுவதில் ஒருவித அச்ச உணர்வு பெண்களிடம் இருக்கிறது. பெரும்பாலான பெண்கள் தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பற்கு போலீஸ் நிலையத்திற்கு வருவதற்கு பயப்படுகிறார்கள். ஒருசிலர் அவசரப்பட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுவிடுகிறார்கள். மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டாலே இத்தகைய சிந்தனைகள் தோன்றாது. அதனை அவர் களுக்கு புரியவைத்தோம். எங்களுடைய பயணம் பெண்களுக்கும், போலீசுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக அமையும் என்று எதிர்பார்க்கிறோம்’’ என்கிறார், பெண் போலீசாரில் ஒருவரான நிர்மலா.மற்றொரு பெண் போலீசான திருமலா இந்த சைக்கிள் பயணத்தில் பங்கேற்பதற்காகவே தன்னுடைய திருமணத்தை தள்ளி வைத்திருக்கிறார். மற்றொருவரான நாகரத்னா விபத்தில் சிக்கி காயம் அடைந்த கால்களுடன் சைக்கிள் பயணத்தை தொடர்ந்திருக்கிறார்.
‘‘ஆறு மாதங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி காயத்தால் அவதிப்பட்டேன். கால்களில் பாதிப்பு அதிகமாக இருந்ததால் சரிவர நடக்கமுடியாமல் சிரமப்பட்டேன். எனினும் சைக்கிள் பயணத்தில் பங்கேற்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அந்த எண்ணமே என்னை காயங்களில் இருந்து விரைவாக விடுவித்தது. எனினும் பயணத்தின்போது சில இடங்களில் வேதனையை உணர்ந்தேன். எனினும் எங்கள் பயண நோக்கத்திற்கு கிடைத்த வரவேற்பு என்னை உற்சாகமாக செயல்பட வைத்துவிட்டது’’ என்கிறார்.
இந்த சைக்கிள் பிரசாரம் குறித்து போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகர் பாபு கூறுகையில், ‘‘போலீஸ் அதிகாரிகள் மட்டத்தில் நடக்கும் வழக்கமான கூட்டங்களில் பெண்கள் அவசரப்பட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது கவனத்திற்கு வந்தது. போலீசை அணுகுவதில் இருக்கும் தயக்கங்களை களையும் முயற்சியாக பெண் போலீசார் மூலம் பிரசாரத்திற்கு ஏற்பாடு செய்தோம்’’ என்றார்.

Related Tags :
Next Story