பழையகோட்டை மாட்டுத்தாவணியில் காங்கேயம் இன மாடுகள் ரூ.65 லட்சத்துக்கு விற்பனை
பழையகோட்டை மாட்டுத்தாவணியில் காங்கேயம் இன மாடுகள் ரூ.65 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டன.
முத்தூர்,
திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகே உள்ள பழையகோட்டையில் உலகிலேயே வீரத்துக்கும், கம்பீரத்துக்கும் காங்கேயம் இன மாடுகளுக்கான மாட்டுத்தாவணி வாரம் தோறும் நடைபெற்று வருகிறது. இங்கு திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல் மாவட்டங்களில் இருந்து காங்கேயம் இன பெரிய பூச்சி காளைகள், இளம் பூச்சி காளைகள், மயிலை பூச்சிகாளைகள், மயிலை மாடுகள், மயிலை கிடாரிகள் ஆகிய காங்கேயம் இனங்களை மட்டும் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இதில் காங்கேயம் இன நாட்டு மாடுகள், கன்றுகள், காளைகள் என ரகம் வாரியாக தரம் பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கடந்த 3 மாதமாக பரவலாக மழை பெய்துள்ளதால் கால்நடைகளுக்கான தீவனங்கள் நன்கு வளர்ந்துள்ளது.
இதனால் காங்கேயம் இன கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் நேற்று அதிகளவில் கலந்துகொண்டனர். நேற்று மொத்தம் 260 காங்கேயம் இன காளைகள், மாடுகள், கன்றுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இதில் மொத்தம் 132 நாட்டு மாடுகள் விற்பனை செய்யப்பட்டன. அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்துக்கு 5 மாத சினையுடன் காங்கேயம் இன செவலை பசுமாடு விற்பனை செய்யப்பட்டது.
அத்துடன், ரூ.1 லட்சத்துக்கு மேல் 12 மாடுகள் விற்பனை செய்யப்பட்டன. நேற்று மட்டும் ஒரே நாளில் மொத்தம் ரூ.65 லட்சத்துக்கு காங்கேயம் இன நாட்டு மாடுகள் விற்பனை நடைபெற்றது. இந்த சந்தையில் திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், திருச்சி, கோவை, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களை சேர்ந்த காங்கேயம் இன காளைகள், மாடுகள் வளர்க்கும் விவசாயிகள், வியாபாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story