7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உண்ணாவிரதம்


7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 18 Dec 2017 4:30 AM IST (Updated: 18 Dec 2017 12:35 AM IST)
t-max-icont-min-icon

7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோவையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை,

2003-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பணி நியமனம் செய்யப்பட்ட அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு ஊதிய குழு நிலுவைத்தொகையை 1.1.2016 முதல் பணப்பயனாக வழங்க வேண்டும். மத்திய அரசு 7-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் அறிவித்ததை போல, தமிழக அரசும் ரூ.15,700-ஐ ரூ.18 ஆயிரமாக நிர்ணயிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோ-கிராப் சார்பில் கோவை சிவானந்தா காலனியில்நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இதற்கு ஜாக்டோ - ஜியோ-கிராப் மாவட்ட தலைவர் தேசிங்குராஜன் தலைமை தாங்கினார். ஒருங் கிணைப்பாளர் சம்பத்குமார் வரவேற்றார். நிதி காப்பாளர்கள் சி.அரசு, சேவுகப்பெருமாள், மார்ட்டின் தேவசகாயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள், அடிப் படை பணியாளர்கள் சங்க மாநில தலைவர் கணேசன் பேசினார். அவர் பேசும் போது, எங்களது கூட்டமைப்பின் 7 அம்ச கோரிக்கைகளை அரசு விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

உண்ணாவிரத போராட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் ஜாக்டோ - ஜியோ-கிராப் மாவட்ட ஒருங்கிணைப் பாளர் ரங்கநாதன் நன்றி கூறினார். 

Next Story