அமாவாசையை முன்னிட்டு பண்ணாரி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு ஏராளமான பக்தர்கள் தரிசனம்


அமாவாசையை முன்னிட்டு பண்ணாரி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு ஏராளமான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 18 Dec 2017 4:00 AM IST (Updated: 18 Dec 2017 2:52 AM IST)
t-max-icont-min-icon

அமாவாசையை முன்னிட்டு பண்ணாரி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

சத்தியமங்கலம்,

சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசிப்பார்கள். செவ்வாய், வெள்ளி மற்றும் அரசு விடுமுறை நாட்களில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

நேற்று அமாவாசை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் காலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தார்கள். கார், வேன், இருசக்கர வாகனங்களில் வந்து கோவிலில் குவிந்தனர். திரளான பக்தர்கள் கோவிலில் திரண்டார்கள். அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. அதற்கு முன்பே பக்தர்கள் வந்து நீண்ட வரிசையில் காத்து நின்றார்கள். காலை 6 மணிக்கு நடைபெற்ற அபிஷேக பூஜையில் கலந்து கொண்டார்கள்.

மேலும் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக தீ விளக்கு ஏற்றி அம்மனை ஆராதனை செய்து வணங்கினார்கள். கற்பூரத்தை கொளுத்தி கோவில் முன்பு மலைபோல் குவித்து வைக்கப்பட்டு உள்ள உப்பின் மீது வீசியும் வேண்டுதலை நிறைவேற்றினார்கள். குண்டம் உள்ள பகுதிக்கு சென்று அங்கிருந்த சாம்பலை எடுத்து நெற்றியில் வைத்துக்கொண்டார்கள். மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மாலை 6 மணிக்கு நடைபெற்ற உச்சிகால பூஜையிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சுமார் ½ மணி நேரத்துக்கு மேலாக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று அம்மனை வழிபட்டார்கள்.


Next Story