கன்டெய்னர் லாரி மோதி பெண் goo மகன் கண்முன்னே பரிதாபம்


கன்டெய்னர் லாரி மோதி பெண் goo மகன் கண்முன்னே பரிதாபம்
x
தினத்தந்தி 18 Dec 2017 4:15 AM IST (Updated: 18 Dec 2017 3:25 AM IST)
t-max-icont-min-icon

மணலி அருகே தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் கன்டெய்னர் லாரி மோதி பலியானார். மகன் கண் முன்னே இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

திருவொற்றியூர்,

திருவொற்றியூர் அண்ணாநகர் 2–வது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் மணி. இவரது மனைவி மல்லிகாதேவி (வயது 52). இவர் திருவொற்றியூர் மார்க்கெட் பகுதியில் பூண்டு வியாபாரம் செய்து வந்தார்.

நேற்று மாலை மல்லிகாதேவி தனது மகன் ஜெயக்குமாருடன் அம்பத்தூரில் உள்ள தேவாலயத்துக்கு மோட்டார்சைக்கிளில் சென்றார். பின்னர் அவர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினர்.

மணலி விரைவு சாலையில் ஐ.ஓ.டி தொழிற்சாலை அருகே வந்தபோது பின்னால் வந்த கன்டெய்னர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். அப்போது, மல்லிகாதேவி மீது லாரி ஏறி இறங்கியது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே மகன் கண் முன்னே பலியானார்.

இந்த சம்பவம் குறித்து மாதவரம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கன்டெய்னர் லாரி டிரைவர் மன்னார்குடியை சேர்ந்த ராயர் அந்தோணி (40) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story