வார்டை தூய்மையாக வைத்திருக்கும் கவுன்சிலர்களுக்கு ரூ.25 லட்சம் கூடுதல் நிதி


வார்டை தூய்மையாக வைத்திருக்கும் கவுன்சிலர்களுக்கு ரூ.25 லட்சம் கூடுதல் நிதி
x
தினத்தந்தி 18 Dec 2017 4:59 AM IST (Updated: 18 Dec 2017 4:58 AM IST)
t-max-icont-min-icon

தங்கள் வார்டை தூய்மையாக வைத்திருக்கும் கவுன்சிலர்களுக்கு ரூ.25 லட்சம் கூடுதல் நிதி வழங்க தானே மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

தானே,

தானே மாநகராட்சியில் 133 வார்டுகள் உள்ளன. இதன் கவுன்சிலர்களுக்கு ஆண்டுதோறும் வார்டு மேம்பாட்டு நிதியாக ரூ.25 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் மிகவும் தூய்மையாக வார்டை பராமரிக்கும் 10 கவுன்சிலர்களுக்கு கூடுதலாக ரூ.25 லட்சத்தை மேம்பாட்டு நிதியாக வழங்க தானே மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இது குறித்து தானே மாநகராட்சி கமி‌ஷனர் சஞ்சீவ் ஜெய்ஸ்வால் கூறும்போது:–

நகரம் தூய்மையாக இருப்பதை உறுதி செய்யும் வகையில் பணியாற்றி வருகிறோம். எனவே தான் தங்கள் வார்டை தூய்மையாக வைத்திருக்கும் கவுன்சிலர்களுக்கு மேம்பாட்டு நிதியை கூடுதலாக வழங்க திட்டமிட்டுள்ளோம். இதற்காக ஆண்டுக்கு ரூ.2½ கோடி ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story