பழனி மலைக்கோவிலில் வேலை பார்த்த தனியார் நிறுவன பெண் காவலாளி திடீர் சாவு
பழனியை அடுத்த சத்திரப்பட்டியை சேர்ந்தவர் முனிராஜ்.
பழனி,
பழனியை அடுத்த சத்திரப்பட்டியை சேர்ந்தவர் முனிராஜ். இவருடைய மனைவி லட்சுமி (வயது 35). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். லட்சுமி தனியார் பாதுகாப்பு நிறுவனம் சார்பில் பழனி மலைக்கோவிலில் காவலாளியாக வேலை பார்த்தார். நேற்று மதியம் இவர், வழக்கம் போல் பணியில் இருந்த போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து மற்ற காவலாளிகள் அவரை ரோப்கார் மூலம் அடிவாரம் பகுதிக்கு கொண்டுவந்தனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர் பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
Related Tags :
Next Story