காஞ்சீபுரம், கேழ்வரகு கூழ் குடித்த 33 பேருக்கு வாந்தி–மயக்கம்


காஞ்சீபுரம், கேழ்வரகு கூழ் குடித்த 33 பேருக்கு வாந்தி–மயக்கம்
x
தினத்தந்தி 19 Dec 2017 5:00 AM IST (Updated: 19 Dec 2017 2:25 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் அருகே கேழ்வரகு கூழ் குடித்த 33 பேருக்கு வாந்தி–மயக்கம் ஆஸ்பத்திரியில் அனுமதி.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் அருகே உள்ள தாமல் கிராமத்தில் வசிப்பவர் ஆனந்தன். இவருக்கு சொந்தமான நிலத்தில் நேற்று பெண்கள் உள்பட 40–க்கும் மேற்பட்டோர் நடவு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அவர்களுக்கு கேழ்வரகு கூழ் வழங்கப்பட்டது.

அதை குடித்த 30 பெண்கள், 3 ஆண்கள் என 33 பேருக்கு திடீரென வாந்தி–மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அவர்களுக்கு வழங்கப்பட்ட கேழ்வரகு கூழில் பல்லி விழுந்து கிடந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அனைவரும் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டு விட்டதால் யாருடைய உயிருக்கும் ஆபத்து இல்லை என டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் பாலுச்செட்டிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகர், சப்–இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story