மண் எடுக்க அனுமதி கோரி மண்பாண்ட தொழிலாளர்கள் மனு


மண் எடுக்க அனுமதி கோரி மண்பாண்ட தொழிலாளர்கள் மனு
x
தினத்தந்தி 19 Dec 2017 5:15 AM IST (Updated: 19 Dec 2017 2:29 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனுநீதி நாள் முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் பொன்னையா பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

காஞ்சீபுரம்,

அப்போது திருகாலிமேடு பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட ஏராளமான மண்பாண்ட தொழிலாளர்கள் கையில் மண் பானைகளை ஏந்தியபடி காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள், மாவட்ட கலெக்டர் பொன்னையாவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அதில் அவர்கள், ‘‘திருகாலிமேடு பகுதியில் மண்பாண்ட தொழிலாளர்கள் 25–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். நாங்கள் மண் பாண்ட தொழிலை நம்பியே வாழ்த்து வருகிறோம். தை பொங்கல் வருகிறது. இதனால் நாங்கள் பானை செய்வதற்கு தேவையான களிமண் எங்கும் கிடைக்கவில்லை. எனவே சிறுகாவேரிப்பாக்கம் ஏரியில் இருந்து நாங்கள் மண் பாண்டம் செய்ய தேவையான களிமண்ணை எடுத்துக்கொள்ள மாவட்ட நிர்வாகம் எங்களுக்கு அனுமதி அளித்து எங்கள் வாழ்வாதாரத்துக்கு வழி வகுக்க வேண்டும்’’ என கூறி இருந்தனர்.


Next Story