தற்கொலை செய்து கொள்ள எலி மருந்துடன் வந்த வியாபாரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பரபரப்பு


தற்கொலை செய்து கொள்ள எலி மருந்துடன் வந்த வியாபாரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 19 Dec 2017 4:30 AM IST (Updated: 19 Dec 2017 2:51 AM IST)
t-max-icont-min-icon

தற்கொலை செய்து கொள்ள எலி மருந்துடன் வந்த வியாபாரியால் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர்,

ஆற்காடு அருகே மேல்விஷாரத்தை சேர்ந்தவர் ஜமில்அகமத் (வயது 56), தோல் வியாபாரி.

இவர் நேற்று காலை வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு புகார் மனு கொடுக்க வந்தார். அப்போது வாசலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரின் பையை வாங்கி சோதனை செய்தபோது அதில் எலி மருந்து இருந்தது.

இவர் தற்கொலை செய்து கொள்ள எலி மருந்து கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்து அவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கடந்த 2005-ம் ஆண்டு ரூ.60 லட்சம் மதிப்புள்ள எனது வீட்டை ஆற்காடு பகுதியை சேர்ந்த ஒருவரிடம் அடமானம் வைத்தேன். அவர் எனது வீட்டை எனக்கு தெரியாமல் கிரயம் செய்து கொண்டார். இந்த விவரம் எனக்கு தற்போது தான் தெரியவந்தது.

இதுபற்றி ஆற்காடு டவுன் போலீசில் புகார் அளித்தேன். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக போலீசார் என்னை அவமானப்படுத்தினர். இதனால் உயிர் வாழ எனக்கு விருப்பம் இல்லை. இதனால் நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன். வீட்டை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் நடவடிக்கை எடுப்பதாக கூறி அவரை அனுப்பி வைத்தனர்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தற்கொலை செய்து கொள்ள எலி மருந்துடன் வந்த வியாபாரியால் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story