இலவம்பாடி பெரிய ஏரி நீர்வரத்து கால்வாய்களை தூர்வார வேண்டும் மக்கள்குறைதீர்வு கூட்டத்தில் கோரிக்கை
அணைக்கட்டு தாலுகாவில் உள்ள இலவம்பாடி பெரிய ஏரியின் நீர்வரத்து கால்வாய்களை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் குறை தீர்வு கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
வேலூர்,
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
அணைக்கட்டு தாலுகா இலவம்பாடி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்களது கிராமத்தில் பெரிய ஏரி, குட்டை ஏரி என்ற 2 ஏரிகள் உள்ளது. அதை சுற்றி ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. பெரிய மலையில் இருந்து மழைநீர் கால்வாய் மூலம் வந்து பெரிய ஏரி நிரம்பும். பல ஆண்டுகளாக இந்த ஏரிக்கு வரும் கால்வாய் தூர்வாராததாலும் கால்வாய்களை ஆக்கிரமிப்பு செய்து இருப்பதாலும் மழைநீர் ஏரிக்கு வர வழியில்லை.
ஏரிகள் தண்ணீர் இல்லாததால் விவசாயம் செய்ய முடியவில்லை. விவசாயிகள் வருமானம் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். இதுமட்டும் அல்லாமல் கோடை காலங்களில் குடிநீர் இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறோம். தற்சமயம் மோர்தானா கால்வாயில் நீர் வருவதால் பக்கத்து கிராமத்தில் உள்ள ஏரிகள் எல்லாம் நிரம்பி வருகின்றன. எங்கள் ஊரில் இருந்து மோர்தானா கால்வாய்க்கு செல்லும் கால்வாய் சுமார் 500 மீட்டர் தூரமே உள்ளது. அதில் இருந்து கால்வாய் அமைத்து ஏரிக்கு தண்ணீர் வர வழிவகை செய்ய வேண்டும். மேலும் பெரிய மலையில் இருந்து ஏரிக்கு வரும் 3 கால்வாய்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு அனைத்து துறை இரவு காவலர்கள் மற்றும் அலுவலக உதவியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் பெண் துப்புரவு தொழிலாளர்கள் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் நாங்கள் துப்புரவு தொழிலாளர்களாக பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு பல மாதங்களாக ஊதியம் ஏதும் வழங்கப்படவில்லை. ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு 14 மாதமும், கந்திலி ஒன்றியத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு 12 மாதமும், நாட்டறம்பள்ளி ஒன்றியத்தில் பணியாற்றுபவர்களுக்கு 5 மாதமும் ஊதியம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து பலமுறை மனுக்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. பொங்கல் போனசும் வழங்கப்படவில்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் கலெக்டர் அலுவலகம் எதிரே நாங்கள் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
காட்பாடி தாலுகா கிருஷ்ணாநகரை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்துள்ள மனுவில், எங்கள் பகுதியில் 200 குடும்பங்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வருகிறோம். ஆனால் எங்களுக்கு சாலை வசதி இல்லை. பலமுறை நாங்கள் பஞ்சாயத்து மூலமாக குறைகளை தெரிவித்தோம். எவ்வித நடவடிக்கையும் இல்லை. மழைக்காலங்களில், சேறும், சகதியுமாக சாலை மிகவும் மோசமாக காணப்படுகிறது. கால்வாய் வசதி இல்லாததால் மிகவும் அவதிப்படுகிறோம். தேங்கும் கழிவுநீரால் தொற்று நோய்கள் பரவுகிறது. தெருவிளக்குகள் இல்லாததால் இரவில் விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகளவு உள்ளது. இதனால் குழந்தைகள், பெண்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல அச்சப்படுகிறார்கள். எனவே எங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆம்பூர் தாலுகா வடபுதுப்பட்டு பனந்தோப்பை சேர்ந்த முகம்மதுலத்தீப் என்பவர் தனது பகுதியை சேர்ந்த சிலருடன் கொடுத்துள்ள மனுவில், எங்கள் பகுதியில் 10 குடும்பங்கள் விவசாயம் செய்தும், கால்நடைகளை வளர்த்தும் கடந்த 80 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஆம்பூர் தாசில்தார் நாங்கள் வசிக்கும் பகுதியை அரசு புறம்போக்கு நிலம் என்று கூறி, இங்கு அரசு அலுவலகம் கட்ட வேண்டும் என்றும், அதற்கு அனைவரும் வீட்டை காலி செய்ய வேண்டும் என்றார். தற்போது, அவர் கட்டிடம் கட்டும் பணியை தொடங்கி விட்டார். எங்களுக்கு வேறு நிலமோ, வீடோ கிடையாது. எனவே எங்கள் மனு குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
கூட்டத்தில் கட்டுமான தொழில் வளர்ச்சிக் குழுமம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் நடத்தப்பட்ட திறன் பரிசோதனை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.
கூட்டத்தில் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story