திசையன்விளை அருகே காட்டுப்பகுதியில் காருக்குள் நிதி நிறுவன அதிபர் பிணம்


திசையன்விளை அருகே காட்டுப்பகுதியில் காருக்குள் நிதி நிறுவன அதிபர் பிணம்
x
தினத்தந்தி 19 Dec 2017 4:00 AM IST (Updated: 19 Dec 2017 3:01 AM IST)
t-max-icont-min-icon

திசையன்விளை அருகே காட்டுப்பகுதியில் காருக்குள் நிதி நிறுவன அதிபர் பிணமாக கிடந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நிதிநிறுவன அதிபர் நெல்லை மாவட்டம் திசையன்விளை சுடலை ஆண்டவர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தங்கசாமி நாடார். இவருடைய மகன் செ

நெல்லை,

திசையன்விளை அருகே காட்டுப்பகுதியில் காருக்குள் நிதி நிறுவன அதிபர் பிணமாக கிடந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் திசையன்விளை சுடலை ஆண்டவர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தங்கசாமி நாடார். இவருடைய மகன் செல்வராஜ் (வயது 53). இவர், திசையன்விளையில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார்.

நேற்று மதியம் வீட்டில் இருந்து காரில் புறப்பட்டுச் சென்றார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய உறவினர்கள் செல்வராஜை தேடினர்.

அப்போது அப்புவிளை அருகே காட்டுப்பகுதியில் ஒரு கார் நின்றது. அங்கு சென்று பார்த்த போது, அந்த கார் செல்வராஜூக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. காரின் பின் இருக்கையில் செல்வராஜ் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை.

இதுதொடர்பாக திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். செல்வராஜ் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story