சிக்கலை தவிர்க்க ‘சீட் பெல்ட்’
குடும்பத்துடன் பயணம் செல்ல கார்கள் வசதியாக இருப்பதால், அவற்றை செல்வந்தர்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது, நடுத்தர மக்களும் கணிசமான அளவு கார்களை பயன்படுத்த தொடங்கி விட்டனர்.
குடும்பத்துடன் பயணம் செல்ல கார்கள் வசதியாக இருப்பதால், அவற்றை செல்வந்தர்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது, நடுத்தர மக்களும் கணிசமான அளவு கார்களை பயன்படுத்த தொடங்கி விட்டனர். இதனால், சாலைகளில் அணிவகுக்கும் கார்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. குறிப்பாக, நகர்ப்புறங்களில் அவற்றை பயன்படுத்துவோர் அதிகம்.
ஆனால், கார் டிரைவர்களும், அதில் பயணிப்பவர்கள் விதிமுறைகளை முறையாக கடைபிடிக்கிறார்களா? என்றால் இல்லை. இது விபத்துக்கு வித்திடுவதோடு, அதில் உயிர் பலிகள் ஏற்படவும் காரணமாகிவிடுகிறது. குறிப்பாக, கார் ஓட்ட கற்றுக்கொள்ளும்போது ‘சீட் பெல்ட்’ அணிய வேண்டும் என்பதுதான் முதல் பாடமாக இருக்கும். ஆனால், இதை கடைபிடிப்பவர்களின் எண்ணிக்கை சொற்ப அளவில் தான் இருக்கிறது.
நமது நாட்டில் 10 நிமிடங்களுக்கு 3 பேர் விபத்தில் மரணம் அடைகிறார்கள். அவ்வாறு நேரும் மரணங்களில் 10 பேரில் 4 பேர் காரில் ‘சீட் பெல்ட்’ அணியாமல் பயணிப்பவர்கள் என்று தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
இந்தியாவை பொறுத்தவரை கார் ஓட்டி செல்பவர்களும், காரில் பின்புறம் இருப்பவர்களும் கட்டாயம் ‘சீட் பெல்ட்’ அணிய வேண்டும் என்று சட்டங்கள் இருக்கின்றன என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. இந்த விதிகள், சட்டங்கள் எல்லாம் மரணங்களை தடுக்கவே தோற்றுவிக்கப்பட்டது. ஆகவே, விதிகளை பின்பற்றுவோம். வீண் பலிகளை தடுப்போம்.
-கோவை ஏ.எம்.கே.ஜாவித்மீரான்.

Related Tags :
Next Story