பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு ஆட்டோ தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் வட்டார போக்கு வரத்து அலுவலகம் முன்பு ஆட்டோ தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட சி.ஐ.டி.யூ.வின் ஓர் அங்கமான ஆட்டோ மற்றும் அனைத்து வகையான வாகன ஓட்டுனர் தொழிற்சங்கத்தின் சார்பில் நேற்று பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு ஆட்டோ ஓட்டுனர் சங்க மாவட்ட தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ மாவட்ட செயலாளர் அழகர்சாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், சி.ஐ.டி.யூ. மாவட்ட துணைத்தலைவர் கணேசன், சாலையோர வியாபாரிகள் சங்க செயலாளர் ரெங்கராஜ், மின்ஊழியர் மத்திய அமைப்பு நிர்வாகி அகஸ்டின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆட்டோ தொழிற்சங்கத்தினரை அழைத்துபேசி மீட்டர் கட்டணத்தை மத்திய-மாநில அரசுகள் நிர்ணயம் செய்ய வேண்டும். மோட்டார் வாகன சட்ட திருத்தம் என்கிற பெயரில் ஓட்டுனர் உரிமத்தை பறிப்பது, வாகனத்தை முடக்குவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடக் கூடாது.
பயிற்சி பள்ளி தொழி லாளர்களை பாதிக்கும் புதிய மோட்டார் வாகன சட்டத்தை கைவிட வேண்டும்.
தமிழகம் முழுவதும் ஆட்டோ தொழிலாளர்கள் மீது காவல்துறை எடுக்கும் அடக்குமுறையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக தொழிற்சங்கத்தினர் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

Related Tags :
Next Story