காட்டுப்பன்றி இறைச்சி விற்ற 7 பேர் தப்பியோட்டம் ஆட்டோ, 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
திருவண்ணாமலை அருகே காட்டுப்பன்றி இறைச்சி விற்பனை செய்த 7 பேர் தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து ஒரு ஆட்டோ, 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை வனச் சரகர் மனோகரன், வனவர் சீனிவாசன் மற்றும் அலுவலர்கள் நேற்று அதிகாலை சுமார் 4 மணியளவில் மெய்யூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கண்ணமடை பகுதியில் உள்ள காப்புக்காட்டில் 7 பேர் கொண்ட கும்பல் காட்டுப்பன்றியை அடித்து கொன்று, அதனை வெட்டி இறைச்சியை விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதை கண்ட வனத்துறையினர் அவர்களை பிடிக்க முயன்றனர்.
வனத்துறையினரை கண்டதும், காட்டுப்பன்றி இறைச்சியை விற்று கொண்டிருந்த 7 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
பின்னர் வனத்துறையினர் அங்கிருந்த சுமார் 10 கிலோ எடையுள்ள காட்டுப்பன்றி இறைச்சி, 3 மோட்டார் சைக்கிள்கள், ஒரு ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்து திருவண்ணாமலையில் உள்ள வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.
முதற்கட்ட விசாரணையில், காட்டுப்பன்றி இறைச்சி விற்பனையில் ஈடுபட்டது மெய்யூர் பகுதியை சேர்ந்த நரிக்குறவர் தங்கம் மற்றும் அவரது கூட்டாளிகள் என்பது தெரியவந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து அவர்களை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story