தரங்கம்பாடி பகுதியில் மீண்டும் மழை கடல் சீற்றத்தால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
தரங்கம்பாடி பகுதியில் மீண்டும் மழை பெய்தது. மேலும் கடல் சீற்றத்தால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
பொறையாறு,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 27-ந் தேதி தொடங்கியது. இதனை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதேபோல் தரங்கம்பாடி தாலுகா பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதனால் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின. மேலும், தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் தரங்கம்பாடி பகுதியில் கடந்த சில நாட்களாக மழைவிட்டு வெயில் அடித்து வந்தது. ஆனால் மாலை மற்றும் இரவு நேரங்களில் கடும் குளிர் இருந்தது. மேலும், பனி பொழிவு அதிகமாக இருந்ததால் அதிகாலை நேரத்தில் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் சிரமப்பட்டனர். கடந்த 2 நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்று வீசியது.
இந்நிலையில் நேற்று தரங்கம்பாடி, பொறையாறு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மீண்டும் மழை பெய்தது. மேலும், தரங்கம்பாடி பகுதியில் கடல் சீற்றமாக இருந்தது. இதனால் தரங்கம்பாடி, குட்டியாண்டியூர், சந்திரபாடி, சின்னூர்பேட்டை, வெள்ளக்கோவில், பெருமாள்பேட்டை, புதுப்பேட்டை, தாழம்பேட்டை, சின்னங்குடி, சின்னமேடு ஆகிய பகுதிகளை சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் மீனவர்கள், தங்களது படகுகளை பாதுகாப்பாக கடற்கரையோரம் நிறுத்தி வைத்தனர்.
கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 6 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க சென்று வருகின்றனர். இப்பகுதி மீனவர்கள், கடல் சீற்றமாக இருந்ததால் நேற்று 2-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் மீனவர்கள் விசை படகு மற்றும் பைபர் படகுகளை பழையாறு துறைமுகத்தில் நிறுத்தி வைத்தனர்.

Related Tags :
Next Story