வேலூரில் ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


வேலூரில் ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Dec 2017 4:15 AM IST (Updated: 20 Dec 2017 2:15 AM IST)
t-max-icont-min-icon

வேலூரில் ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

வேலூர்,

வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் நேற்று வேலூர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜா என்கிற ராஜேந்திரன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் என்.காசிநாதன் தொடக்கவுரையாற்றினார். தலைவர் எம்.பி.ராமச்சந்திரன் சிறப்புரையாற்றினார். ஆட்டோதொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் முரளி, பொருளாளர் ராமு, துணை செயலாளர் பாஸ்கர் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களை ஆட்டோ தொழிலில் அனுமதிக்கக்கூடாது, அவர்கள் வசூலிக்கும் முறையற்ற கட்டணத்தை தடுக்கவேண்டும், ஒரிஜினல் ஓட்டுனர் உரிமத்தை கையில் வைத்திருக்கவேண்டும் என்ற உத்தரவை திரும்பப்பெற வேண்டும், உயர்த்தப்பட்ட இன்சூரன்ஸ் பிரிமியத்தொகையை குறைக்க வேண்டும், பெட்ரோல், டீசல், கியாஸ் ஆகியவற்றின் விலைகளை ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டுவரவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். 

Next Story