நெல்லை மாநகராட்சி பிராதன சாலைகளில் குப்பை தொட்டிகள் வைக்க வேண்டும்


நெல்லை மாநகராட்சி பிராதன சாலைகளில் குப்பை தொட்டிகள் வைக்க வேண்டும்
x
தினத்தந்தி 20 Dec 2017 4:00 AM IST (Updated: 20 Dec 2017 3:27 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாநகராட்சியில் பிரதான சாலைகளில் குப்பை தொட்டிகள் வைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு நகராட்சிகளின் நிர்வாக முதன்மை செயலாளர் ஹர்மந்தர்சிங் உத்தரவிட்டு உள்ளார்.

நெல்லை,

தமிழக நகராட்சிகளின் நிர்வாக முதன்மை செயலாளர் ஹர்மந்தர்சிங் நேற்று வேய்ந்தான்குளம் எம்.ஜி.ஆர். பஸ்நிலையத்திற்கு சென்று ஆய்வு நடத்தினார். அப்போது கழிப்பறை, சுகாதார வளாகங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்கும் அறை மற்றும் வாகன பாதுகாப்பு அறைகள் ஆகியவற்றை பார்வையிட்டார். அப்போது பஸ்நிலைய வளாகத்தில் அணுகுசாலையை செப்பனிடவேண்டும். கழிப்பறையை சுத்தமாக பராமரிக்க வேண்டும் பஸ்நிலைய பூங்காவை சிறப்பான முறையில் பராமரிக்கவேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

முன்னதாக, நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் அவர், அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். அப்போது, மாநகராட்சி பகுதியில் நடைபெறும் பணிகள் குறித்தும், ஏற்கனவே முடிக்கப்பட்ட பணிகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் அவர் கூட்டத்தில் பேசுகையில்,‘ மாநகராட்சியிலுள்ள அனைத்து பிரதானசாலைகளிலும் குப்பை தொட்டிகள் வைக்கவேண்டும். குப்பை தொட்டி நிரம்பிய உடனே எடுக்கவேண்டும். கழிவு நீர் ஓடைகளில் உடைப்பு ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும். பஸ்நிலையங்கள், பிரதான சாலைகளில் தினமும் கழிவுநீர் ஓடைகளை அதிகாரிகள் கண்காணிக்கவேண்டும். பூங்காக்களில் மரங்களை நட்டு நன்றாக பராமரிக்கவேண்டும். மாநகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்தும் வரிகளை தொய்வின்றி வசூலிக்கவேண்டும் என அறிவுரை வழங்கினார்.

இந்த ஆய்வில் மாநகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) நாராயணநாயர், மாநகர நல அலுவலர் டாக்டர் பொற்செல்வன், உதவி ஆணையாளர் கவிதா, உதவி செயற்பொறியாளர்கள் சாமுவேல்செல்வராஜ், கருப்பசாமி, சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story