எல்.ஐ.சி. ஜீவன் சிரோமணி புதிய பாலிசி அறிமுகம்


எல்.ஐ.சி. ஜீவன் சிரோமணி புதிய பாலிசி அறிமுகம்
x
தினத்தந்தி 20 Dec 2017 3:29 AM IST (Updated: 20 Dec 2017 3:29 AM IST)
t-max-icont-min-icon

எல்.ஐ.சி.யில் ஜீவன் சிரோமணி என்ற புதிய பாலிசியை நெல்லை முதுநிலை கோட்ட மேலாளர் வசந்தகுமார் அறிமுக செய்து தொடங்கி வைத்தார்.

நெல்லை,

எல்.ஐ.சி.யின் நெல்லை கோட்டத்தின் சார்பில் ரூ.1 கோடி காப்பு தொகை கொண்ட தீவர நோய் காப்பீடு மற்றும் விபத்துக்காப்பீடு அடங்கிய புதிய பாலிசியான ஜீவன் சிரோமணி என்ற புதிய பாலிசி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த பாலிசியை நேற்று நெல்லை முதுநிலை கோட்ட மேலாளர் வசந்தகுமார் அறிமுக செய்து தொடங்கி வைத்தார். இதில் வணிக மேலாளர் வெங்கடகிருஷ்ணன், விற்பனை மேலாளர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இது குறித்து நெல்லை முதுநிலை கோட்ட மேலாளர் வசந்தகுமார் கூறியதாவது:–

நெல்லை கோட்டம் இந்த நிதியாண்டில் இதுவரை 64 ஆயிரத்து 354 பாலிசிகளின் மூலமாக ரூ.191 கோடியே 49 லட்சம் முதற் பிரிமியம் வருவாய் ஈட்டி தென் மண்டலத்தில் சாதனை புரிந்து உள்ளது. இதில் ஜீவன் அக்‌ஷயா என்ற பென்சன் திட்டத்தின் மூலம் மட்டும் ரூ.116 கோடியே 55 லட்சம் முதற்பிரிமியமாக ஈட்டி உள்ளது. இந்த பிரிமியம் விற்பனையில் நெல்லை கோட்டம் முதலிடத்தில் உள்ளது.

தற்போது குறைந்த காப்புத்தொகை ரூ.1 கோடியில் அதாவது வசதிபடைத்தவர்களுக்காக ஜீவன் சிரோமணி என்ற புதிய பாலிசி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதில் குறைந்த அளவு பிரிமியம் ரூ.7 லட்சமாகும். பாலிசி காலம் 14, 16, 18,20 வருடங்களாகும். இதில் கடைசி 4 வருடத்திற்கு பிரிமியம் செலுத்தத்தேவையில்லை. 18 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் இதில் இணையலாம். ஒரு வருடம் பிரிமியம் செலுத்திய பிறகு அதில் கடன் வாங்கி கொள்ளும் வசதி உள்ளது. வருடத்திற்கு ரூ.5 லட்சம் போனசாக பெறலாம். இந்த பாலிசியில் தீவிர நோய்காப்பீடு மற்றும் வீபத்துகாப்பீடு இணைந்துவிடும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story