திருப்தி இல்லையெனில் திரும்ப அழைப்போம்!
இந்தியாவில் முதன்முதலாக, தவறு செய்யும் எம்.பி., எம்.எல்.ஏ., உள்ளாட்சி பிரதிநிதிகள் முதலிய மக்கள் பிரதிநிதிகளை திரும்ப அழைக்க குரல் கொடுத்தவர்கள், எம்.என்.ராய் மற்றும் லோக்நாயக் ஜெயபிரகாஷ் நாராயணன் ஆவர். ஜேம்ஸ் மில், “மக்கள் விரும்பாத மக்கள் பிரதிநிதிகளை ஒதுக்கி வைப்பது நல்லது” என்று கூறுகின்றார்.
தற்போது சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், தைவான், உக்ரைன், வெனிசுலா, போட்ஸ்வானா, தான்சானியா, நமீபியா, மலாவி, ஜாம்பியா, உகாண்டா, கயானா, கனடாவில் உள்ள சட்டமன்றங்களில், அமெரிக்காவில் அலாஸ்கா, கன்சாஸ், மின்னசோட்டா, மொன்டானா, ரோட் தீவு மற்றும் வாஷிங்டன் போன்ற மாநிலங்களுடைய உள்ளாட்சி அமைப்புகள் போன்ற பல உலக நாடுகளில் தவறு செய்யும் மக்கள் பிரதிநிதிகளை திரும்ப அழைக்கும் உரிமை வாக்காளர்களுக்கு உள்ளது.
திரும்பி அழைக்கும் முறை முதன்முதலாக 1903-ம் ஆண்டு அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்சில் கடைபிடிக்கப்பட்டது. கனடாவில் சீர்திருத்த கட்சி இதை தனிநபர் மசோதா மூலம் தொடக்கத்தில் வலியுறுத்தியது. ஜெர்மனி போன்ற நாடுகளில் நாடாளுமன்ற உறுப்பினர்களை திரும்ப அழைப்பது குறித்து நடைமுறைப்படுத்த விவாதங்கள் நடைபெறுகின்றன.
ஏன், இந்தியாவில் கூட மத்தியபிரதேசம், சத்தீஸ்கார் போன்ற மாநிலங்களில் உள்ளாட்சி பிரதிநிதிகளை திரும்ப அழைக்கும் உரிமைக்காக 10 ஆண்டுகளுக்கு முன்பே சட்ட திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. குஜராத் மாநிலத்திலும் இது பரிசீலனையில் இருக்கிறது. திரும்ப அழைக்கும் முறையை வலியுறுத்தி வருண்காந்தி தனிநபர் மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இதே போல, திருப்தி அளிக்காத, தவறு செய்யும் பிரதிநிதிகளை திரும்ப அழைக்கும் மசோதா பிரிட்டன் பாராளுமன்றத்திலும் வரவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இது பாராட்டத்தக்கது.
நாட்டின் இறையாண்மை என்பது அந்நாட்டின் மக்களிடமே உள்ளது. இறையாண்மை, பொதுவாழ்வின் தூய்மையை பாதுகாக்க வேண்டுமென்றால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நேர்மையாக தங்களுடைய கடமைகளை ஆற்றவேண்டும். அப்படி இல்லாமல், தவறு செய்யும் மக்கள் பிரதிநிதிகளை திரும்ப பெறும் உரிமையை வாக்களித்த மக்களுக்கு வழங்க வேண்டும் என 50 ஆண்டுகளுக்கு முன்பே ஐ.நா. சபையின் பொதுச்செயலாளராக இருந்த மியான்மரை சேர்ந்த உதாண்ட் வலியுறுத்தினார்.
தேர்தல் காலத்தில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் அறிக்கையின் மூலம் மக்களுக்கு பல உறுதிமொழிகளை அளிக்கின்றன. இப்படிப்பட்ட பிரகடனங்கள் மக்களுக்கு நல்ல திட்டங்களை நிச்சயம் வகுக்கும் என்ற உறுதியைத் தருவதாகும். நாட்டில் நிலவும் பொருளாதார, அரசியல், சமூக சூழ்நிலைகளின் காரணமாக தேர்தல், அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் செயல்படுத்துவது நடைமுறையில் சற்று கடினம்தான்.
தாங்கள் அளித்த வாக்குறுதிகளை கிட்டத்தட்ட 80 சதவீதம் தங்கள் ஆட்சியின் காலத்தில் நடைமுறைப்படுத்தி, மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகளை செய்வது அரசியல் கட்சிகளின் ஜனநாயக கடமையாகும். இல்லாதபட்சத்தில், தங்களுக்கு வாக்களித்த மக்களை ஏமாற்றிவிட்டார்கள் என்றுதான் அர்த்தம்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள், மக்களின் திருப்திக்கு மாறாகவும் தாங்கள் அளித்த வாக்குறுதிகளை செயல்படுத்தாமலும் இருந்தால், ஆட்சியில் இருந்து திரும்ப அழைக்கும் உரிமையை மக்களுக்கு வழங்க வேண்டும். இதுதான் ஆட்சியாளர்கள், தவறாக அதிகாரத்தை பயன்படுத்துதல், லஞ்சம் வாங்குதல், உறவினர்களுக்கு சலுகைகள் வழங்குதல், ஊழல் செய்தல் போன்றவற்றுக்கு முடிவு கட்டும். மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பது வெறும் மேடை முழக்கமாக மட்டும் இருக்கக்கூடாது.
ஒரு குறிப்பிட்ட தொகுதி எம்.பி. அல்லது எம்.எல்.ஏ.வின் செயல்பாடுகள், நடவடிக்கைகள் தொகுதி மக்களுக்கு திருப்தி அளிக்காமல் இருந்தால் அவரை திரும்ப அழைக்கும் உரிமையை, அக்குறிப்பிட்ட தொகுதி மக்களுக்கு வழங்க வேண்டும். தேர்தலில் வெற்றி பெற்று ஐந்து வருட காலம் ஜனநாயக விதிமுறைகளுக்கு மாறாக, தான்தோன்றித்தனமாக ஆள முற்படுபவர்களுக்கு திரும்ப அழைக்கும் முறை ஒரு தடையாக, தண்டனையாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அரசியல் அறிவியலின்படி சமன்பாடுகளும் தடைகளும் நேர்மையான நல்ல நிர்வாகத்தை நடத்த அவசிய காரணிகளாகும்.
சோவியத் அரசியல் சட்டத்தில் (1936) அரசியல் சாசனப் பிரிவு 106-ல் இந்தக் கொள்கைத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதாவது, தாங்கள் ஆற்ற வேண்டிய பணிகளையும், தங்களுடைய அரசியல் தன்மையையும், தங்களுடைய தொகுதி மக்களுக்கு கண்காணிக்க உரிமையுள்ளது என கூறப்பட்டது. அவ்வாறு தவறினால், தங்களை திரும்ப அழைக்கும் உரிமை தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு உண்டு என்று தெரிவிக்கப்பட்டது. சோவியத் நாட்டில் இவ்வாறு மக்கள் பணியில் தவறிய உறுப்பினர்கள் பல்வேறு சமயங்களில் திரும்ப அழைக்கப்பட்டுள்ளதாக நீதிபதி கிருஷ்ணய்யர் கூறியுள்ளார். ஆனால், இன்றைக்கு சோவியத் நாடு சிதறுண்டு இருக்கிறது என்பது வேறு விவகாரம்.
திரும்ப அழைக்கும் முறையைக் கொண்டு வருவதில் நடைமுறை சிக்கல்கள் இருந்தாலும், அதை நடைமுறைப்படுத்த வேண்டிய வழி முறைகளை பல்வேறு தரப்பினர்களை அணுகி, ஆலோசனைகளைப் பெற்று, இந்தக் கோட்பாட்டை நெறிப்படுத்தி செயல்முறைக்கு கொண்டு வரலாம். இதை, இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் கொண்ட, பல்வேறு தேசிய இனங்கள் கொண்ட நாட்டில் நடைமுறைப்படுத்துவது எளிதல்ல என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனாலும் இதுகுறித்தான ஒரு ஆரோக்கியமான விவாதங்கள் இந்தியாவில் நடப்பது வரவேற்கத்தக்கதாகும்.
திரும்ப அழைக்கும் கொள்கை, நடைமுறைக்கு வந்தால் பாராளுமன்ற, சட்டசபைகளில் ஜனநாயகம் தூய்மை பெறும். மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகளை மக்களின் பிரதிநிதிகள் செம்மையாக ஆற்றுவர் என்பதில் ஐயமில்லை.
வக்கீல் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், சென்னை

Related Tags :
Next Story