தூத்துக்குடியில் பரிதாபம்: தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி போலீஸ்காரர் பலி
தூத்துக்குடியில், தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் போலீஸ்காரர் பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில், தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் போலீஸ்காரர் பரிதாபமாக இறந்தார்.
ஆயுதப்படை போலீஸ்காரர்தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் கீழகல்லூரணியை சேர்ந்தவர் சிவகாமு. இவருடைய மகன் சிவமுருகன்(வயது 31). இவரது மனைவி உமா. இவர்களுக்கு லோக தீபக், ஹேம தீபக் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். சிவமுருகன், கடந்த 2010–ம் ஆண்டு சென்னை போலீசில் பணியில் சேர்ந்தார். கடந்த 4–11–2013 அன்று தூத்துக்குடி ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.
அதன்பிறகு சிவமுருகன் தூத்துக்குடி 3–வது மைல் சங்கர் காலனியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். தற்போது இவர் தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு நுகர்பொருள் வாணிப கழக குடோனில் வைக்கப்பட்டு உள்ள வாக்குப்பதிவு எந்திரங்களின் பாதுகாப்புக்காக பணியமர்த்தப்பட்டு இருந்தார்.
பரிதாப சாவுஇந்த நிலையில் நேற்று காலை 6 மணி அளவில் பணிக்கு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சிவமுருகன் சென்றார். அப்போது லேசான மழை பெய்து கொண்டு இருந்தது. சிவமுருகன் பாளையங்கோட்டை ரோட்டில் நூற்பாலை அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி, ரோட்டின் நடுவில் இருந்த தடுப்பு சுவரில் மோதியது.
இதில் கீழே விழுந்த சிவமுருகன் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். உடனடியாக அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் சிவமுருகனை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சிவமுருகன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன், உதவி போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம், ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு முருகேசன், இன்ஸ்பெக்டர்கள் அய்யம்பெருமாள், முத்து மற்றும் போலீசார் சிவமுருகன் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து சிவமுருகனின் உடல் சொந்த ஊரான கீழகல்லூரணிக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு அவரது உடலுக்கு பொதுமக்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் 7 போலீசார் வானத்தை நோக்கி 3 முறை துப்பாக்கியால் சுட்டு, 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் சிவமுருகனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.