பயிர் கடன்களை மத்திய கால கடனாக மாற்ற கால அவகாசம் நீட்டிப்பு கலெக்டர் வெங்கடேஷ் அறிவிப்பு


பயிர் கடன்களை மத்திய கால கடனாக மாற்ற கால அவகாசம் நீட்டிப்பு கலெக்டர் வெங்கடேஷ் அறிவிப்பு
x
தினத்தந்தி 21 Dec 2017 2:00 AM IST (Updated: 21 Dec 2017 12:25 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் பயிர் கடன்களை மத்திய கால கடனாக மாற்றுவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் பயிர் கடன்களை மத்திய கால கடனாக மாற்றுவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

நீட்டிப்பு

தமிழ்நாட்டில் வறட்சி காரணமாக அனைத்து மாவட்டங்களையும் வறட்சி மாவட்டமாக அரசு அறிவித்து இருந்தது. இதையொட்டி விவசாயிகள் தங்கள் கடனை திருப்பி செலுத்துவதில் உள்ள சிரமத்தை கருத்தில் கொண்டு கூட்டுறவு வங்கிகள் மற்றும் வணிக வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர் கடன்களை மத்திய கால கடனாக மாற்றி அமைக்க கடந்த 31.8.2017 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது இந்த கால வரையறை வருகிற 31–ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

மத்தியகால கடன்

விவசாயிகள் பெற்றுள்ள பயிர் கடன்களை மத்திய கால கடன்களாக மாற்ற தேவையான சான்றிதழ்கள் வங்கிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளன. எனவே கடந்த 1.4.2016 முதல் 31.12.2016 வரை வழங்கப்பட்டு, 31.12.2017 வரை நிலுவையில் உள்ள பயிர்க்கடன், விவசாய காசுக்கடன், விவசாய நகைக்கடன், விவசாய கூட்டுப் பொறுப்புக்குழு கடன்களை மத்திய கால கடனாக மாற்றிக் கொள்ளலாம். எனவே விவசாயிகள் தாங்கள் கடன் பெற்றுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது வங்கி கிளைகளை அணுகி இந்த வாய்ப்பை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.


Next Story