கிருஷ்ணகிரியில் அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க கிருஷ்ணகிரி மாவட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கோவிந்தம்மாள் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பெர்னாட் கோரிக்கை விளக்கவுரையாற்றினர். சந்திரன், ஜெயராமன், நாகராஜன், பிரதாப் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில தணிக்கையாளர் நடராஜன் சிறப்புரையாற்றினர். இதில், அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு, புதுச்சேரி அரசு வழங்குவது போல் இளநிலை உதவியாளர்களுக்கான ஊதியம் வழங்கிட வேண்டும். ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு முறையான ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். 1.1.2016 முதல் ஊதியக்குழு நிலுவைத் தொகையை ரொக்கமாக வழங்கப்பட வேண்டும். மே மாதம் கோடை விடுமுறை வழங்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்றிட கோரி முழக்கங்கள் எழுப்பினர். சி.ஐ.டி.யு மாவட்டத் தலைவர் ஜெயராமன் நிறைவுரையாற்றினர். மாவட்ட பொருளாளர் பாவாயி நன்றி கூறினார்.

Related Tags :
Next Story