தொப்பூர் கணவாயில் லாரிகள் மோதல்; டிரைவர் பலி


தொப்பூர் கணவாயில் லாரிகள் மோதல்; டிரைவர் பலி
x
தினத்தந்தி 21 Dec 2017 4:30 AM IST (Updated: 21 Dec 2017 12:32 AM IST)
t-max-icont-min-icon

தொப்பூர் கணவாயில் லாரிகள் மோதிக்கொண்ட விபத்தில் டிரைவர் பலியானார்.

நல்லம்பள்ளி,

ஆந்திரா மாநிலம் சித்தூரில் இருந்து மதுரைக்கு கடப்பா கல் ஏற்றிய சரக்கு லாரி புறப்பட்டது. லாரியை மதுரையை சேர்ந்த டிரைவர் ராஜா (வயது 37) என்பவர் ஓட்டிச்சென்றார். இந்த லாரி தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாயில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அப்போது சாலையின் மையத்தடுப்பு சுவர் மீது மோதி மறுபுறத்திற்கு சென்ற லாரி அந்த வழியாக வந்த மற்றொரு லாரி மீது மோதியது.

இந்த விபத்தில் லாரியில் இருந்த கடப்பா கற்கள் சாலையில் விழுந்தன. இதில் இடிபாடுகளில் சிக்கிய லாரி டிரைவர் ராஜா பரிதாபமாக உயிரிழந்தார்.

அந்த லாரியில் வந்த மற்றொரு டிரைவர் மாதவன் (வயது 50), எதிரே வந்த லாரியில் இருந்த டிரைவர்கள் செல்வராஜ் (42), சரவணன்(29) ஆகியோர் காயமடைந்தனர். இவர்களை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக தர்மபுரி - சேலம் சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த தொப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை சீரமைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story