தூத்துக்குடியில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ராஜேந்திர ரத்னு ஆய்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் பணிகள் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக தூத்துக்குடி மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ராஜேந்திர ரத்னு நேற்று தூத்துக்குடிக்கு வந்தார். அவர், மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் முன்னிலையில், தூத்துக
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் பணிகள் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக தூத்துக்குடி மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ராஜேந்திர ரத்னு நேற்று தூத்துக்குடிக்கு வந்தார்.
அவர், மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் முன்னிலையில், தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாண்டுரங்கன் தெரு, ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட கோரம்பள்ளம் சர்ச் தெரு ஆகிய பகுதிகளில் வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.
அப்போது, புதிதாக பெயர் சேர்க்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களையும், முகவரி திருத்தம், நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்கள் விவரங்களையும் சம்பந்தப்பட்ட வீட்டுக்கு சென்று விசாரித்தார். ஆய்வின் போது, தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சங்கர நாராயணன் மற்றும் அலுவலர்கள் உடன் சென்றனர்.