காரியாபட்டி அருகே மணல் லாரிகளை மறித்து போராட்டம்
காரியாபட்டி அருகே பிசிண்டியில் மணல் குவாரி உள்ளது. லாரிகள் வந்த செல்ல குண்டாற்றின் குறுக்கே ரோடு போடப்பட்டுள்ளது.
காரியாபட்டி,
காரியாபட்டி அருகே பிசிண்டியில் மணல் குவாரி உள்ளது. லாரிகள் வந்த செல்ல குண்டாற்றின் குறுக்கே ரோடு போடப்பட்டுள்ளது. இந்த ரோட்டால் மாணவர்கள் பள்ளி செல்ல முடியவில்லை. வெள்ளநீர் ஊருக்குள் வந்து விடும் ஆபத்து இருப்பதால் அவற்றை அப்புறப்படுத்த கோரி வடகரை கிராமத்தினர் அப்பகுதியில் வந்து லாரிகளை மறித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து லாரிகளை மறித்து போராட்டம் செய்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் அந்த பகுதியில் போடப்பட்டிருந்த ரோட்டை அப்புறப்படுத்தினர். அதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story