குப்பைகளுக்கு வைத்த தீயில் நாட்டு வெடிகுண்டு வெடித்தது 5 வீடுகளின் ஜன்னல், கதவுகள் சேதம்
காட்பாடி காங்கேயநல்லூரில் காலி இடத்தில் கிடந்த குப்பைகளின் மேல் தீவைத்ததில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் அதனை சுற்றி உள்ள 5 வீடுகளின் ஜன்னல், கதவுகள் உடைந்து சேதமடைந்தன.
காட்பாடி,
வேலூர் மாவட்டம் காட்பாடி காங்கேயநல்லூரில் மடம் தெருவில் கோபி என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. வீட்டின் பின்புறம் காலி இடம் உள்ளது. காலி இடத்தில் குப்பைகள் கிடந்ததால் அதே பகுதியை சேர்ந்த சதீஷ், சுரேஷ் ஆகியோர் தீ வைத்தனர். அப்போது திடீரென வெடி சத்தம் கேட்டது. இதனால் இருவரும் அலறி அடித்து ஓடினர். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சம்பவ இடத்திற்கு ஓடி வந்தனர். அங்கு பார்த்தபோது நாட்டு வெடி குண்டு வெடித்தது தெரியவந்தது.
இந்த நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் அருகில் இருந்த மோட்டார்சைக்கிள் சேதமானது. சுமார் 5 வீடுகளின் ஜன்னல், கதவுகள் உடைந்தன. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், காலையில் ‘டமார்’ என வெடிசத்தம் கேட்டது. நாங்கள் அலறிவிட்டோம். என்ன ஏது என பார்த்த போது நாட்டு வெடிகுண்டு வெடித்தது தெரியவந்தது. இந்த சத்தம் 1 கிலோ மீட்டர் தூரம் வரை கேட்டது.
வெடி வெடித்த இடத்தில் இருந்த கற்கள் சாலையில் விழுந்து கிடந்தன. ஒரு வீட்டில் இருந்த கோழிகூண்டு பறந்து 4 வீடுகள் தாண்டி உள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடியில் விழுந்தது. சில வீடுகளின் ஜன்னல்கள், வென்டிலேட்டர்கள், கதவுகள் உடைந்து சேதமாகி உள்ளது என்றனர்.
இந்த சம்பவம் குறித்து கமலகண்ணன் என்பவர் விருதம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த பாஸ்கர் (வயது 45) என்பவர் நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்து திருவிழாக்களுக்கு கொடுத்து வருவதும் அதில் ஒரு நாட்டு வெடிகுண்டை அஜாக்கிரதையாக அங்கு வைத்திருந்ததும் தெரியவந்தது. வெடிகுண்டு மேல்குப்பை கூளங்கள் இருந்ததால் தீ வைத்தவர்களுக்கு தெரியவில்லை.
வெடிகுண்டு வெடித்த பிறகு தான் அந்த இடத்தில் நாட்டு வெடிகுண்டு இருந்தது தெரியவந்தது. நேற்று பள்ளி இருந்ததால் எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெறவில்லை. இல்லை என்றால் குழந்தைகள் அந்த இடத்தில் விளையாடிக் கொண்டிருக்கும். இதனால் அசம்பாவித சம்பவம் நடந்திருக்கும் இந்த சம்பவம் குறித்து விருதம்பட்டு போலீசார் பாஸ்கர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story