பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அதிகாரிகள் ஆர்ப்பாட்டம்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அதிகாரிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 Dec 2017 3:30 AM IST (Updated: 21 Dec 2017 1:28 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு,

கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு மடிக்கணினி வழங்க வேண்டும். பட்டா மாறுதல்கள், கிராம நிர்வாக அதிகாரிகளின் அனுமதி பெற்ற பின்பே மாறுதல் செய்ய வேண்டும்.

தேர்தல் செலவுகளை வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உடனே வழங்க வேண்டும் ஆகியவை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அதிகாரிகள் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சத்தியமங்கலம் தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு கிராம நிர்வாக அதிகாரி சங்க வட்டார தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சத்தியமங்கலம் தாலுகாவுக்கு உள்பட்ட கிராம நிர்வாக அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர்.

அந்தியூர் தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் விஜயன் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். இதில் அந்தியூர் தாலுகாவுக்கு உள்பட்ட கிராம நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர்.

நம்பியூர் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க வட்ட தலைவர் சுமதி தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் சுபாஷ்குமார் முன்னிலை வகித்தார்.

இதில் கிராம நிர்வாக அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story