மீஞ்சூர் பஜாரில் குடோனில் பதுக்கிய ரூ.20 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்


மீஞ்சூர் பஜாரில் குடோனில் பதுக்கிய ரூ.20 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 21 Dec 2017 4:15 AM IST (Updated: 21 Dec 2017 1:42 AM IST)
t-max-icont-min-icon

மீஞ்சூர் பஜாரில் குடோனில் பதுக்கிய ரூ.20 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பொன்னேரி, 

மீஞ்சூர் பஜாரில் உள்ள குடோனில் தடை செயயப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சப்-இன்ஸ்பெக்டர்கள் பீமன், ரஞ்சித் மற்றும் போலீசார் குடோனில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த லாரியில் இருந்து புகையிலை பொருட்கள் குடோனில் பதுக்குவது தெரிய வந்தது. இதையடுத்து லாரி மற்றும் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ரூ.20 லட்சம்

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும். இதையடுத்து குடோன் உரிமையாளரான மீஞ்சூரை சேர்ந்த பாலாஜி (வயது 26), லாரி டிரைவர் லோகநாதன்(30) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

அங்கு பதுக்கி வைக்கப்படும் புகையிலை பொருட்கள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுவது விசாரணையில் தெரிய வந்தது. அவர்களுடன் தொடர்பு உள்ளவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story