சுற்றுலா பஸ்-ராட்சத லாரி மோதல்; அய்யப்ப பக்தர்கள் உள்பட 15 பேர் காயம்
பெரம்பலூர் அருகே சுற்றுலா பஸ்சும், ராட்சத லாரியும் மோதியதில் அய்யப்ப பக்தர்கள் உள்பட 15 பேர் காயமடைந்தனர்.
மங்களமேடு,
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் தாலுகா மேட்டுக்குப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட அய்யப்ப பக்தர்கள் விரதம் இருந்து சுற்றுலா பஸ் மூலம் சபரிமலைக்கு சென்றனர்.
அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு, பின்னர் மீண்டும் அதே பஸ்சில் சொந்த ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். விழுப்புரம் பகுதியை சேர்ந்த தாமோதரன் (வயது 32) பஸ்சை ஓட்டி வந்தார். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் மாவட்டம் பேரையூர் கைகாட்டி பகுதியில் வந்த போது, முன்னால் சென்று கொண்டிருந்த ராட்சத லாரி மீது எதிர்பாராதவிதமாக அந்த பஸ் மோதியது. இதில் பஸ்சின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கி சாலையோர பள்ளத்தில் இறங்கி நின்றது.
இந்த விபத்தில் சிக்கிய அய்யப்ப பக்தர்கள் அலறினர். இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விபத்து குறித்து தகவல் அறிந்த மங்களமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த அய்யப்ப பக்தர்களை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தில் அய்யப்ப பக்தர்களான விழுப்புரத்தை சேர்ந்த பிச்சை மகன் ஏழுமலை (28), துரைபாண்டி (28), சண்முகம் (47), செந்தில்முருகன் (28), சாமிக்கண்ணு (58), இளவரசன் (19), கிருஷ்ணமூர்த்தி மகன் ஏழுமலை (25), ராட்சத லாரி டிரைவர் உத்தரபிரதேசத்தை சேர்ந்த அனுஜ்குமார் (22) உள்பட 15 பேர் காயம் அடைந்தனர். மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே சம்பவ இடத்திற்கு மங்களமேடு போலீஸ் துணை சூப்பிரண்டு ஜவகர்லால் நேரில் வந்து பார்வையிட்டு போக்குவரத்தினை உடனே சீரமைக்க போலீசாருக்கு ஆலோசனை வழங்கினார்.

Related Tags :
Next Story