தபால் நிலையத்தில் ரூ.20 ஆயிரம் கணக்கில் குறைந்ததால் பெண் அதிகாரி தற்கொலை
கரூர் மாவட்டம் தெலுங்கபட்டி தபால் நிலையத்தில் ரூ.20 ஆயிரம் கணக்கில் குறைந்ததால் மனவேதனை அடைந்த பெண் அதிகாரி தற்கொலை செய்து கொண்டார். இந்த அதிர்ச்சியில் அவரது வளர்ப்பு தாயும் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
தோகைமலை,
கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள கள்ளை காலனியை சேர்ந்தவர் பொன்ராஜ். இவருடைய மனைவி மாணிக்காயி. கூலி வேலை செய்யும் இவர்களுக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை என்பதால் முசிறி அருகே உள்ள மாங்கரைபேட்டையில் இருந்து பிறந்து சில நாட்களே ஆன ஒரு பெண் குழந்தையை தத்து எடுத்து மாரியம்மாள் என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தனர்.
தற்போது 22 வயது ஆன மாரியம்மாள் என்ஜினீயரிங் படித்துள்ளார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் வாழ்ந்த மாரியம்மாள் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தோகைமலையில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் தபால் பை எடுக்கும் பணியாளராக பணிக்கு சேர்ந்தார். பின்னர் துறை ரீதியான தேர்வில் தேர்ச்சி பெற்ற மாரியம்மாள், பொருந்தலூர் ஊராட்சி தெலுங்கபட்டியில் உள்ள அஞ்சல் அலுவலகத்தின் கிளை அலுவலக அதிகாரியாக (போஸ்ட் மாஸ்டர்) பணியாற்றி வந்தார்.
மிகவும் பின் தங்கிய நிலையில் செயல்பட்டு வந்த தெலுங்கபட்டி அஞ்சல் அலுவலகத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக மாரியம்மாளுக்கு அஞ்சல் துறை சார்பில் கடந்த செப்டம்பர் மாதத்தில் ரூ.52 ஆயிரம் ஊக்க தொகையும் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு தான் பணியாற்றி வரும் தெலுங்கபட்டி அஞ்சல் அலுவலகத்தில் ரூ.20 ஆயிரம் கணக்கில் குறைந்தது தெரிய வந்தது.
இதையடுத்து தனது தந்தை மற்றும் உறவினர்களிடம் கடன் வாங்கி கணக்கில் குறைந்த ரூ.20 ஆயிரத்தை அஞ்சல் அலுவலகத்தில் திருப்பி செலுத்தி அதனை சரி செய்தார். ஆனால் சரியாக பணியாற்றியும் எப்படி கணக்கில் ரூ.20 ஆயிரம் குறைந்தது என்று தெரியாமல் மனவேதனையில் இருந்துள்ளார்.
இந்நிலையில் மனவேதனை தாங்க முடியாமல் கடந்த 16-ந் தேதி தனது வீட்டில் இருந்த எலி மருந்தை (விஷம்) மாரியம்மாள் தின்றுவிட்டார். இதை அறிந்த உறவினர்கள் அவரை மீட்டு திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தார். இந்த தகவல் அறிந்த சில நிமிடங்களில் மாணிக்காயி(45) தான் தத்து எடுத்தாலும், தன்னுடைய மகளாக எண்ணி வளர்த்த செல்ல மகள் இறந்து விட்டாளே என்ற அதிர்ச்சியில் வீட்டில் மயங்கி விழுந்து இறந்தார்.
நேற்று மாலை திருச்சி அரசு மருத்துவமனையில் மாரியம்மாள் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, கள்ளை காலனிக்கு கொண்டு வந்தனர். பின்னர் மாரியம்மாள் உடலையும், மாணிக்காயி உடலையும் சேர்த்து எடுத்து சென்று ஒரே இடத்தில் வைத்து தகனம் செய்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து உறவினர் மகாமுனி அளித்த புகாரின் பேரில் தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story