பயிர் காப்பீடு செய்தவர்களுக்கு இழப்பீடு வழங்காததை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல் முயற்சி
அறந்தாங்கி அருகே பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு, இழப்பீடு தொகை வழங்காததை கண்டித்து, விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள அரசர்குளம்மேல்பாதி பகுதியில் கடந்த ஆண்டு சுமார் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் 900 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் பயிர் காப்பீடுக்கான பிரிமியம் செலுத்தி இருந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு வறட்சியால் இப்பகுதியில் விவசாயம் பாதிக்கப்பட்ட நிலையில், இதுவரை அப்பகுதி விவசாயிகளுக்கு பயிர் இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை. இதுகுறித்து பயிர் காப்பீடு செய்யும் நிறுவனமான தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் விவசாயிகள் முறையிட்டனர். இருப்பினும் அவர்களுக்கு பயிர் இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை.
இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நேற்று காலை அரசர்குளம் மேலப்பாலம் அருகே சாலை மறியல் செய்ய வந்தனர். இதையடுத்து அவர்களிடம் அறந்தாங்கி தாசில்தார் ரவிச்சந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு தட்சிணாமூர்த்தி, தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் காப்பீடு நிறுவன மாவட்ட மேலாளர் சந்திரசேகரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில் பயிர்காப்பீடு செய்து இழப்பீடு தொகை கிடைக்காமல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை கிடைக்க மேல் அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக காப்பீட்டு நிறுவன அதிகாரிகள் உறுதியளித்தனர். இதைத் தொடர்்ந்து விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். விவசாயிகள் சாலைமறியல் முயற்சியொட்டி அறந்தாங்கி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

Related Tags :
Next Story