ஊதியக்குழு நிலுவைத்தொகையை வழங்கக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா போராட்டம்


ஊதியக்குழு நிலுவைத்தொகையை வழங்கக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 21 Dec 2017 4:00 AM IST (Updated: 21 Dec 2017 2:51 AM IST)
t-max-icont-min-icon

ஊதியக்குழு நிலுவைத்தொகையை வழங்கக்கோரி விழுப்புரத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று மாலை தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் சாந்தி தலைமை தாங்கினார். இணை செயலாளர் மகேஸ்வரி வரவேற்றார். முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெசிந்தாமேரி தொடக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் வண்ணமதி கோரிக்கை விளக்கவுரையாற்றினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முத்துக்குமரன் சிறப்புரையாற்றினார்.

அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்களுக்கு புதுச்சேரி அரசு வழங்குவதுபோல் இளநிலை உதவியாளருக்கான ஊதியத்தை வழங்கி காலமுறை ஊதியத்திற்குள் கொண்டுவர வேண்டும், ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு முறையான ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும், 1.1.16 முதல் ஊதியக்குழு நிலுவைத்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் மகாலிங்கம், அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க நிர்வாகிகள் பானு, திலகம், உமாபதி, பிரித்தி, லதா, அம்பிகா, சரஸ்வதி, செல்வி, பானுமதி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் வாணிஸ்ரீ நன்றி கூறினார்.


Next Story